செவ்வாய், 31 டிசம்பர், 2019

சளியால் அவதியா?

சளியால் அவதியா?
சட்டுன்னு போக இத செய்யுங்க!
நுரையீரல் சளியை வெளியேற்ற ஒரே ஒரு வெற்றிலையுடன் இஞ்சி சிறிய துண்டு.!
பலரை வாட்டி வதைக்கும் சளி பிரச்சனையை தீர்ப்பது எப்படி என்று பார்க்கப் போகின்றோம். நுரையீரல் சளி என்பது சாதாரண விடயம் கிடையாது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
ஆரம்பத்தில் சாதாரண விடயமாக இருக்கும் இந்த சளி நாட்கள் சென்றபின் வேறு நோய்களையும் உருவாக்கிவிடும். அதனால் சளி ஆரம்பத்தில் இருக்கும் போதே வெளியேற்றுவது தான் சிறப்பு. இந்த மருந்து ஆஸ்துமா, நுரையீரல் சளி, இருமல், போன்றவற்றிக்கு நிவாரணம் அளிக்கிறது. சரி வாங்க முதலில் மருத்துவ குறிப்பை பார்க்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்:
வெற்றிலை ஒன்று. இஞ்சி சிறிய துண்டு. தேன் தேவையான அளவு. இவற்றை வைத்து எப்படி மருந்து செய்வதென பார்க்கலாம். முதலில் வெற்றிலையின் காம்பை நீக்கிவிடுங்கள். வெற்றிலையை துண்டு துண்டாக நறுக்கி அதனுடன் இஞ்சியை சேருங்கள். நன்றாக கொதித்த தண்ணீர் ஒரு டீஸ்பூன் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து அதில் வரும் ஜூஸை சிறிய பாத்திரத்தில் வடித்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஜூஸ் சிறிது காரமாக இருக்கும் அதனால் சிறிதளவு தேன் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இப்போது மருந்து தயார். இந்த ஜூஸை காலை மற்றும் மாலை இரண்டு வேலையும் குடித்து வர இரண்டே நாட்களில் நுரையீரல் சளி ஆஸ்துமா போன்றவை நீங்கிவிடும்.
இது மலத்துடன் வெளியேறுவதால் எந்த பக்க விளைவுகளும் இல்லை. இந்த ஜூஸ் 10 வயதிற்கு மேட்பட்டவர்கள் எடுத்துக் கொள்ளலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக