வெள்ளி, 10 ஏப்ரல், 2015

அம்மான் பச்சரிசி - முகப்பரு, எண்ணெய் பசை, கால் ஆணி, வாய்ப்புண், மலச்ச்க்கள் குணமாகும்


தமிழில் அம்மான் பச்சரிசி என்று அழைக்கப்படும் இத்தாவரத்தின் தாவரவியல் பெயர் Euphorbia hirta என்பது ஆகும். இதன் பேரைக் கேட்டதும் இது அரிசி போன்று இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். இது ஒரு மூலிகையே.. இதற்கு சித்திரப் பாலாடை என்ற பெயரும் உண்டு... வித்தியாசமான பெயரைக் கொண்ட இது வியக்கத்தக்க மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது. நானும்கூட இந்த இலையின் பெயரை பால்பூடு என்று சொல்லித்தான் கேள்விப்பட்டிருக்கேன். சமீபத்தில் கோவையில் நடந்த ஒரு மூலிகை மருத்துவ மாநாட்டில் கலந்து கொண்ட போதுதான் இதன் பெயர் அம்மான்பச்சரிசி என அறிந்து கொண்டேன்!!

இத்தாவரம் தரிசு நிலங்கள், சாலை ஓரங்கள், ஈரப்பாங்கான சமவெளி நிலங்களில் சாதாரணமாகக் காணப்படும் களைச்செடி. ஆண்டு முழுவதும் பரவலாகக் காணப்படுபவை. 50 செ.மீ. வரை உயரமாக வளரும். இலைகள் எதிரெதிராக அமைந்தவை, சொரசொரப்பானவை. பச்சை, சிவப்பு நிறங்களில் இலைகள் காணப்படும். சிறுபூக்கள் தொகுப்பாக அணுக்களில் அமைந்திருக்கும். பூக்கள் வெண்மையாகவும், காம்புகளுடனும் காணப்படும். தாவரத்தின் எப்பகுதியைக் கிள்ளினாலும் பால் வடியும். அம்மான் பச்சரிசிக்கு சித்திரப்பாலாடை என்கிற பெயரும் உண்டு.
இத்தாவரத்தின் முழுப்பகுதியும் மருத்துவத்தில் பயன்படுகிறது. துவர்ப்பு மற்றும் இனிப்பு சுவையுடையது. குளிர்ச்சித் தன்மையுடையது. குடல் புழுக்களைக் கொல்லும், உள்ளுறுப்புகளிலுள்ள காயங்களை ஆற்றும், மலமிளக்கும், சுவாசத்தைச் சீராக்கும், இருமலைத் தணிக்கும், பெண்களுக்கு பால் சுரப்பைத் தூண்டும், விந்து ஒழுக்கை குணமாக்கும்.
அம்மான் பச்சரிசிப் பால் ஒரு அரிய மருந்தாகும். முகத்தில் தடவ முகப்பரு, எண்ணெய் பசை ஆகியவை மாறும். காலில் பூசிவர கால் ஆணி, பாதத்தில் ஏற்படும் பித்தவெடிப்பு ஆகியவை மறையும். பால் பருக்கள் மீது பூச அவை உதிரும். இதனை உள்மருந்தாகக் கொடுக்க இரைப்பு குறையும். ஆஸ்துமா, வாய்ப்புண் ஆகியவற்றுக்கான மருத்துவத்திலும் அம்மான் பச்சரிசி துணைமருந்தாக பயன்படுகிறது.

அம்மான் பச்சரிசி பெரும்பாலும் நஞ்சை காடுகளிலும், கிணற்று ஓரங்களிலும், நீர்நிலை மற்-றும் ஈரமாக உள்ள இடங்களிலும் காணப்படுமழைக் காலங்களில் தான் நன்கு வளரும். இதன் இலை அல்லது கொடியை நறுக்கினால் பால் கசியும்.  சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பயன்பாடு அதிகம்.

தாய்ப்பால் சில தாய்மார்களுக்கு குழந்தைக்குத் தேவையான அளவு சுரக்காமல் இருக்கும் போதுமான அளவு சுரக்க, அம்மான் பச்சரிசியின் பூக்களை தேவையான அளவு எடுத்து சுத்தம் செய்து, பசும்பால் விட்டு அரைத்து பசும்பாலிலேயே கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும்..சில பெண்களுக்கு வெள்ளைபடுதல் ஒரு பிரச்சனையாக இருக்கும் ,அது நீங்க அம்மான் பச்சரிசி இலையை அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் ஐந்து நாட்கள் வரை அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் நின்றுபோகும் .அம்மான் பச்சரிசி பாலை மருவின் மீது தடவி வந்தால் மரு உதிர்ந்துவிடும்அம்மான் பச்சரிசி, தூதுவளை இரண்டையும் சம அளவு எடுத்து பாசிப்பருப்பு உளுந்தம் பருப்பு இவற்றுடன் சேர்த்து கூட்டு வைத்து அதனுடன் தேங்காய் துருவல், நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் உடம்பில் தாது பலப்படும்.. ஈரமுள்ள இடங்களில் தானே வளரும். வடிவ இலைகளையுடையது. பால் உள்ளவை. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது.விவசாய நிலங்களில் கழையாக வளரும். விதை மூலம் இனப்பெருக்கம் அடைகிறது.
இலை, தண்டு, பால், பூ, ஆக்கியவை. பயன்தரும்.
அம்மான் பச்சரிசிக்கு நெருப்புப் புண் ,, மலச்ச்க்கள் , , நமச்சல் , பரு ,மறு நீகள் ஆகிய குணம் உண்டு  இதன் பாலை நக சுற்றிக்குதடவ குணமாகும்.

அம்மான் பச்சரிசி (Euphorbia hirta) ஒரு மருத்துவ மூலிகையாகும். இது முகப்பரு, முகத்தில் எண்ணெய்ப் பசை, கால் ஆணி, பித்த வெடிப்பு, இரைப்பு ஆகியவற்றை குறைக்கவும், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கவும் பயன்படுகிறது.தலைப்பு

1 கருத்து: