புதன், 19 பிப்ரவரி, 2020

இரத்த_அழுத்தம்_குறைய……!!

#இரத்த_அழுத்தம்_குறைய……
#வீட்டு_வைத்திய #மருத்துவக்_குறிப்புகள்
💚 இரத்தக் கொதிப்பு
குணமாக……
💊 பிரஷர் சூரணம்💊
1.லேசாக வறுத்த சீரகம் 100கி,
2.லேசாக வறுத்த ஏல அரிசி 50கி,
3.பச்சை கற்பூரம் 25கி இதை நன்கு கல்வத்தில் அரைத்து பின் மேற்கண்ட பொருள்களையும் சேர்த்து நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொண்டு,
4.சுக்கு 10கி
5.மிளகு 10கி
6.திப்பிலி 10கி
7.கொத்தமல்லி 20கி
8. அமுக்கிரா 20கி
4 முதல் 8 வரை உள்ளவற்றை நன்கு சூரணித்து பின் மேலுள்ள 1 முதல் 3 வரையுள்ள கலவையையும் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக்கி வைத்துக்கொண்டு காலை இரவு 1 கிராம் அளவு உணவுக்குப் பின்பு……
high பிரஷர் உள்ளபோது எலுமிச்சை சாற்றிலும்,
low பிரஷர் உள்ளபோது நாட்டுக்கோழி சூப் அல்து மிளகு ரசத்திலும் அருந்தவும்.
ரத்த அழுத்தம் விரைவில் சமநிலையை அடையும்.
என்ன பிரஷர் என்றே தெரியாத போது உடல் குளிர்ந்திருந்தால் வெந்நீரிலும்,
உடல் சூடாக இருந்தால் குளிர்ந்த நீரிலும் அருந்த வேண்டும்.
பலருக்கும் கொடுத்து நல்ல பலனை கண்டுள்ளேன் நன்கு அனுபவித்த மருந்து.
💊 பிரஷர் சூரணம்💊
தேவையான பொருள்கள்
சீரகம் 100 கிராம் அல்லது
தேவையான அளவு
எலுமிச்சை பழச்சாறு
மூழ்கும் அளவு
கண்ணாடி பாத்திரத்தில் தேவையான அளவு எலுமிச்சை சாறு ஊற்றி எடுத்துக் கொள்ளவும்.
தேவையான அளவு சீரகத்தை வெறும் வாணலியில் போட்டு லேசாக சூடு படுத்தி (பொன்னிறமாக வறுக்க வேண்டாம் லேசாக சூடு படுத்தினால் போதும் ) எடுத்துக் கொள்ளவும்.
கண்ணாடிப் பாத்திரத்தில் உள்ள எலுமிச்சை சாற்றில் மூழ்கும்படி சூடு படுத்திய சீரகத்தைப் போட்டு பாத்திரத்தின் வாயை வெள்ளைத் துணியால கட்டி மூடவும்
எலுமிச்சை சாறு வற்றி சீரகம் நன்கு காயும் வரை இதை அப்படியே நாள் தோறும் வெயிலில் வைத்து வரவும்
நன்கு காய்ந்த இந்த சீரகத்தை
(லேசாக சூடு படுத்தி எலுமிச்சை சாற்றில் ஊறி காய்ந்த )
நன்கு அரைத்து தூளாக எடுத்து பத்திரப் படுத்தவும்
இந்த மருத்துவ குணம் நிறைந்த சீரகத்தை நாள்தோறும் காலை மாலை என இரண்டு வேளைகள் ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வர உயர் இரத்த அழுத்தம் அற்புதமாக கட்டுக்குள் வரும்.
💚 இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் குறைய
தேவையான பொருட்கள்
இஞ்சி - 1 துண்டு (துருவியது)
பூண்டு - 1 (துருவியது)
ஆப்பிள் சீடர் வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
👉செய்முறை
மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு 30 நொடிகள் அரைக்கவும். பின் அதனை ஒரு டப்பாவில் போட்டு 5 நாட்கள் ஃப்ரிட்ஜில் வைத்து, பின் உட்கொள்ளவும்.
👉எப்படி பயன்படுத்துவது
இந்த மருந்தை தினமும் இருவேளை எடுக்க வேண்டும். அதிலும் காலையில் எழுந்தும் வெறும் வயிற்றில் 1 டேபிள் ஸ்பூன் மற்றும் இரவு உணவு உண்பதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் 1 டேபிள் ஸ்பூன் என உட்கொள்ள வேண்டும்.
இச்செயலை தொடர்ந்து மூன்று நாட்கள் பின்பற்றி வந்தால், உடல் நன்கு புத்துணர்ச்சியுடனும், ஆற்றலுடனும் இருப்பது போன்று உணர்வதோடு, உங்களது உயர் இரத்த அழுத்தமும், உயர் கொலஸ்ட்ராலும் குறைந்திருப்பதை நன்கு காணலாம்.
💚 இரத்த கொதிப்பை குறைக்க
தேவையானப் பொருள்கள்
பால்.
பூண்டு
👉செய்முறை
பசும் பாலில் 2 பல் பூண்டு நசுக்கிப் போட்டு காய்ச்சி இரவில் குடித்து வந்தால் இரத்த கொதிப்பும், கொழுப்பும் குறையும்.
💚 உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க
வெண்தாமரை சூரணம்
ஏலரிசி - ஒரு பங்கு
சுக்கு - இரண்டு பங்கு
திப்பிலி - மூன்று பங்கு
அதிமதுரம் - நான்கு பங்கு
சதகுப்பை - ஐந்து பங்கு
சீரகம் - ஆறு பங்கு
வெண்தாமரை இதழ்கள் - 12 பங்கு
சாப்பிடும் விதம்:
1-2 கிராம் பாலுடன்.
இரத்த பித்தம் சுகமாகும்.


 முருங்கைக் கீரை சாறில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலையும் மாலையும்
2 கிராம் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தம் குறையும்.
 100 கிராம் சீரகத்தை 200 மி.லி., கரும்புச் சாற்றில் கலந்து, பெரிய பாத்திரத்தில் வைத்து வெயிலில் மூன்று தினங்கள் காயவைக்க வேண்டும். பின்னர் காய்ந்த சீரகத்துடன்
100 மி.லி., எலுமிச்சைச் சாறு சேர்த்து, முன்னர்போல் பாத்திரத்தில் வைத்து மூன்று தினங்கள் காயவைத்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில் இரண்டு கிராம் அளவு காலையும் இரவும் உணவுக்கு முன்னர் சாப்பிட்டு வர ரத்த அழுத்த நோய் குறையும்.
 தினமும் டீ,காப்பிக்கு பதிலாக ஒரு டம்ளர் மோரில் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து குடித்தால் இரத்த அழுத்தம் குறையும்.
 வெந்தயத்தை முன் தினமே ஊற வைத்து தயிரோடு அரைத்து தலைக்கு தேய்த்தால் இரத்த கொதிப்பு இறங்கும்.
 அகத்தி கீரையை தினமும் மதியம் மற்றும் இரவு உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பை கட்டுப்படுத்தலாம்.
 தினமும் வெள்ளைப்பூண்டை ஏதாவது ஒரு வகையில் உணவில் உண்டு வந்தால், அது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் என்று தெரிய வந்துள்ளது. தவிர இரத்த அழுத்தத்திற்கான மாத்திரைகளை விடவும் வெள்ளைப்பூண்டு மிகவும் சக்தி வாய்ந்தது.
சில நேரங்களில் உயர் இரத்த அழுத்த நோயாளிகள் எடுத்துக்கொள்ளும் மாத்திரையின் விளைவுகளைக் காட்டிலும் வெள்ளைப்பூண்டு நல்ல பலனைக் கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. பல ஆண்டுகளாக மாத்திரை எடுத்துக் கொண்டவர்களுக்கு வெள்ளைப்பூண்டு நல்ல பலனைக் கொடுத்திருப்பதும் தெரிய வந்துள்ளது. எனவே உயர் இரத்த அழுத்தமா?
கவலையே வேண்டாம். சாப்பிடுங்கள் வெள்ளைப்பூண்டை. (அப்படியே வேண்டுமானாலும்).
 கேரட் சாறு, ஆப்பிள் பழச்சாறு, மாம்பழச்சாறு மற்றும் பேரிக்காய் சாறுஆகியவற்றை நன்றாக கலந்து குடித்து வந்தால் உடல் வெப்பம் குறைந்து இரத்த அழுத்தம் குறையும்.
 சர்பகந்தா செடியின் வேரை உலர்த்தி பொடி செய்து 1 கிராம் அளவு எடுத்து சம அளவு நெல்லிக்காய் பொடி, கடுக்காய் பொடி மற்றும் தான்றிக்காய் பொடி ஆகியவற்றை நன்றாக கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.
 ஆரைக் கீரை சாற்றில் சீரகத்தை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் 5 கிராம் அளவுக்கு சாப்பிட்டால் இரத்த அழுத்தம் குறையும்.
 முழு வெந்தயம் 1 கரண்டி ,
பாசிபயறு 2 கரண்டி ,
கோதுமை 2 கரண்டி ,
இவற்றை முதல்நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலை 2 மிளகு, கறிவேப்பிலை சேர்த்து அரைத்து , காலையில் வெறும் வயிற்றில் தோசை வார்த்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் குறையும்.
 கருங்காலிப்பட்டை 100 கிராம், சதகுப்பை, சீரகம், ஏலக்காய் ஆகியவற்றை வகைக்கு 20 கிராம் எடுத்து ஒன்றாகக் கலந்து இளவறுப்பாய் வறுத்து தூள் செய்து 5 கிராம் அளவு தூளை இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, பாதியாகச் சுண்டச் காய்ச்சி சாப்பிட இரத்த அழுத்த நோய்கள் குறையும்.
 தாமரைப்பூவை நன்கு சுத்தமாக்கி கஷாயம் செய்து அதனுடன் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் இரத்த கொதிப்பு குறையும்.
 குறைந்த இரத்த அழுத்தம் இருப்பவர்கள் ஜடமான்சி வேர், கற்பூரம் மற்றும் இலவங்கப்பட்டைகளை நன்றாக இடித்து போட்டு நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் குறைந்த இரத்த அழுத்தம் மாறும்.
 கறிவேப்பிலையை
நீர் விட்டு அரைத்து சாறு எடுத்து அதனுடன் சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து காலையில் குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.
 அகத்தி கீரை, சுண்ட வத்தல் ஆகியவைகளை சமைத்து அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.
 அருகம்புல்லை நன்கு சுத்தம் செய்து கழுவி சாறு எடுத்து அதனுடன் ஐந்து பங்கு சுத்தமான தண்ணீர் சோ்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.
 தினமும் காலையில் வெறும் வயிற்றில் 4 வெள்ளைப் பூண்டுப் பற்களை சாப்பிட இரத்த அழுத்தம் குறையும்.
 முள்ளங்கியில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் அதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் முள்ளங்கி இரத்த அழுத்தத்தைக் குறையச் செய்யும்.
 அதிகம் சத்தம் போட்டுப் பேசுவதை நிறுத்திவிட வேண்டும்.
 இரத்த அழுத்தம் குறைய தினமும் ஒரு வாழைப் பழம் சாப்பிடுவது நல்லது.
 உப்பும் உப்புச் சார்ந்த ஊறுகாய், அப்பளம், நொறுக்குத் தீனிகள், கருவாடு போன்றவற்றைத் தவிர்த்து விடுதல் நல்லது.
 தினமும் 45 நிமிடம் நடைப் பயிற்சி செய்வது இரத்த அழுத்தத்தைக் குறையச் செய்யும்.
 உணவில் குறைந்த அளவு உப்பை சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
 தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட இரத்த அழுத்தம் குறையும்.
 எளிதில் சீரணமாகக்கூடிய உணவை மட்டுமே உண்ண வேண்டும்.
 உணவில் அதிகளவு கீரைகள், பழங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
 குறிப்பாக குப்பைக்கீரை, முருங்கைக் கீரை,சிறுகீரை போன்றவற்றைசாப்பிடவேண்டும்.
தினமும் உணவில் கறிவேப்பிலையை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.
 தினமும் யோகா மற்றும் தியானம் செய்து வந்தால் இரத்த அழுத்தம் பெருமளவு குறையும்.
 அளவுக்கதிகமாக உள்ள உடற்பருமனைக் குறைப்பதால் இரத்த அழுத்தம் குறையும்.
 புகை பிடித்தல், அளவுக்கதிகமாக மது அருந்துதல் முதலிய பழக்கங்களை நிறுத்துவதனால் இரத்த அழுத்தம் குறையும்....!!
 இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் நாள்தோறும் காலையில் 1-அவுன்ஸ் துளசிச் சாறெடுத்துச் சாப்பிடுவது நல்லது. உடலில் தடை பட்டிருக்கும் ரத்தக்குழாய்களைத் துளசிச் சாறு அகலப்படுத்த உதவுகிறது. இதனால் ரத்த-அழுத்தம் குறைந்து விடும்.
 மருதம் பட்டை, அளவில் பாதி சீரகம் சோம்பு, மஞ்சள் சேர்த்து பொடியாக்கி , காலை மாலை 6 கிராம் அளவு எடுத்து, 400 மில்லி தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து , தண்ணீர் அளவு 200 மில்லி ஆனதும் , பருகி வர, இரத்த அழுத்த நோய் உடலை விட்டு அகலும்.
💚 சேர்க்க வேண்டியவை
தினமும் காலையில் முருங்கைக்கீரையும், சிறிய வெங்காயமும் சேர்த்து சூப் சாப்பிடலாம். மதிய உணவில் 5 - 10 பூண்டுப்பற்கள், 50 கிராமுக்குக் குறையாமல் சிறிய வெங்காயம் சேர்த்துக்கொள்ளலாம். வாழைத்தண்டு, வாழைப்பூ, சுரைக்காய், பீர்க்கங்காய், பார்லி ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்ப்பது அவசியம். எண்ணெய் உணவில் குறைவாக சேர்க்கலாம்.
சீரகத்தை லேசாக வறுத்து அதை மூன்று நாட்கள் இஞ்சிச் சாறிலும், மூன்று நாட்கள் எலுமிச்சைச் சாறிலும் இன்னும் மூன்று நாட்கள் கரும்புச்சாறிலும் ஊறவைத்து உலர்த்திப் பொடித்துக்கொள்ளுங்கள். இந்த பொடியை காலை மாலை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வரலாம். கடைகளில் சீரக சூரணமாகவும் கிடைக்கும். வெந்தயத்தை தினமும் பொடித்து சப்பிடலாம்.
 தவிர்க்க வேண்டியவை
பல காய்கறிகளில் நமக்கு தேவையான உப்புச் சத்து அதிகம் உள்ளது. அதனால், மிகச் சிறிதளவே உப்பு சேர்த்தால் போதுமானது. ரத்தக் கொதிப்பு இருப்பவர்கள் உப்பை மறந்தே தீரவேண்டும். புலால் உணவைத் தவிர்ப்பது நல்லது. ஊறுகாய், இட்லி மிளகாய்ப் பொடி, அப்பளம்,


குறைவான_ரத்த_அழுத்தம் Low_Pp_சரி_செய்வது_எப்படி…❓❓

குறைவான_ரத்த_அழுத்தம் Low_Pp_சரி_செய்வது_எப்படி
👉 ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வு இன்று நம்மிடையே பெரும்பாலானோருக்கு இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் இருந்தால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் அதை விட மாரடைப்பு ஏற்படும் என்று எல்லாருக்கும் தெரிந்திருக்கும்.
இதே நேரத்தில் குறைந்த ரத்த அழுத்தம் பற்றி யாராவது கண்டு கொண்டிருக்கிறோமா அது சத்துக்குறைபாடு என்று நினைத்து அப்படியே விட்டு விடுவோம். ஆனால் இது ஒரு சைலண்ட் கில்லர் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்.
🔴👉ரத்த அழுத்தம்
ரத்தம் இதயத்துக்கு வரும்போது ஒரு குறிப்பிட்ட வேகத்திலும், இதயத்திலிருந்து வெளியேறும்போது வேறு ஒரு வேகத்திலும் செல்கிறது. இதனைத் தான் நாம் ரத்த அழுத்தம் என்கிறோம்.
பொதுவாக, ஒருவருக்கு ரத்த அழுத்தம் 120/80 மி.மீ. இருந்தால், அது இயல்பு அளவு.
உலக சுகாதார நிறுவனம் ஒரு நபருக்கு 100/70 மி.மீ. முதல் 140/90 மி.மீ. வரை உள்ள ரத்த அழுத்தத்தை நார்மல் என்று வரையறை செய்துள்ளது.
இது 140/90 மி.மீ.க்கு மேல் அதிகரித்தால் அதை உயர் ரத்த அழுத்தம் என்றும், 90/60 மி.மீ. பாதரச அளவுக்குக் கீழ் குறைந்தால் அதைக் குறை ரத்த அழுத்தம் என்றும் சொல்கிறது.
 குறைவாக ரத்த அழுத்தம்
காரணம்
இதயத்துக்குத் தேவையான ரத்தம் செல்ல தடை உண்டாவது தான்
குறை ரத்த அழுத்தம் ஏற்பட அடிப்படைக் காரணம்.
தடகள வீரர்கள், கடுமையாக உடற்பயிற்சி செய்பவர்கள், தீவிரமாக ஜிம் பயிற்சி செய்பவர்கள், ஒல்லியான உடல்வாகு உள்ளவர்கள், கர்ப்பிணிகள், தைராய்டு பிரச்னை உள்ளவர்கள், வயதானவர்கள், படுக்கையில் நீண்ட காலம் படுத்திருப்பவர்கள் போன்றோருக்குக் குறை ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
👉அறிகுறிகள் 
தலைச்சுற்றல்,
மயக்கம்,
வாந்தி,
வழக்கத்துக்கு மாறான அதீத நாவறட்சி,
சோர்வு,
பலவீனம்,
கண்கள் இருட்டாவது போன்ற உணர்வு,
பார்வை குறைவது,
மனக்குழப்பம்,
வேலையில் கவனம் செலுத்த முடியாத நிலைமை,
உடல் சில்லிட்டுப்போவது,
மூச்சு வாங்குவது
போன்ற அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றோ அல்லது பல அறிகுறிகளோ உங்களால் உணர முடியும்.
இதனை சரி செய்ய வேண்டுமானால் அடிப்படை காரணத்தை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் அதனை தீர்க்க முடியும்.
பெரும்பாலும் குறைவான ரத்த அழுத்தத்திற்கு காரணம் சத்துக்குறைபாடாகவே இருக்கிறது.
👉யாருக்கு, எப்போது வாய்ப்பு அதிகம்
கர்ப்பம்
கர்ப்பத்தின்போது கர்ப்பிணியின் உடலில் ரத்தக் குழாய்கள் அதிகம் விரிவடைவதால், ரத்த அழுத்தம் குறைகிறது. இதற்குப் பயப்படத் தேவையில்லை. பிரசவத்துக்குப் பிறகு இது சரியாகிவிடும்.
நீரிழப்பு
காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் விளையாட்டுகள், தீவிரமான தீக்காயங்கள், அக்னி நட்சத்திர வெயில் போன்றவை காரணமாக உடலில் நீரிழப்பு ஏற்படும்போது குறை ரத்த அழுத்தம் ஏற்படும்.
நோய்கள்
இதய வால்வு கோளாறுகள், இதயத் துடிப்புக் கோளாறுகள், மாரடைப்பு, இதயச் செயலிழப்பு போன்ற காரணங்களால் குறை ரத்த அழுத்தம் ஏற்படும். நுரையீரல் ரத்த உறைவுக்கட்டி (Pulmonary Embolism), சிறுநீரகச் செயல்இழப்பு, காலில் சிரை ரத்தக்குழாய் புடைப்பு நோய் (Varicose veins) போன்றவற்றாலும் தானியங்கி நரம்புகள் செயல்படாதபோதும் இது ஏற்படுகிறது.
விபத்துகள்
வீட்டில், சாலையில், அலுவலகத்தில், தண்ணீரில் ஏற்படும் விபத்துகளால் மூளை, முதுகுத் தண்டு வடம் மற்றும் நுரையீரலில் அடிபடும்போது அல்லது பாதிப்பு ஏற்படும்போது அங்குள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டு குறை ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
ஹார்மோன் கோளாறுகள்
தைராய்டு மற்றும் பிட்யூட்டரி குறைபாடுகள், பேரா தைராய்டு மற்றும் அட்ரீனல் கோளாறுகள், கட்டுப்படாத நீரிழிவு நோய், ரத்த சர்க்கரை தாழ்நிலை போன்றவை ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
ரத்தம் இழப்பு
விபத்துகள் மூலம் ரத்தம் இழப்பு ஏற்படும்போதும், டெங்கு காய்ச்சல், மூலநோய், இரைப்பைப் புண், குடல் புற்றுநோய், அளவுக்கு அதிகமான மாதவிலக்கு போன்ற உடல் நோய்களால் ரத்தம் இழக்கப்படும்போதும் குறை ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
தீவிர நோய்த்தொற்று
சில தொற்றுக் கிருமிகள் ரத்தத்தில் கலந்து நச்சுக்குருதி நிலையை (Septicaemia) உருவாக்கும். அப்போது ரத்த அழுத்தம் குறையும்.
ஒவ்வாமை
மருந்துகள், உணவுகள், விஷக்கடிகள் போன்றவற்றால் ஒவ்வாமை ஏற்படும்போதும் ரத்த அழுத்தம் திடீரென்று குறையும்.
சத்துக்குறைவு
ரத்தசோகை நோய் இருப்பவர்களுக்கும், வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலம் குறைவாக உள்ளவர்களுக்கும் ரத்த அழுத்தம் குறைவதுண்டு.
மருந்துகள்
சிறுநீரைப் பிரியச் செய்யும் மருந்துகள், மன அழுத்த நோய்க்கான மருந்துகள், ஆண்மைக் குறைவுக்குத் தரப்படுகிற ‘வயாகரா’ வகை மாத்திரைகள், பார்கின்சன் நோய்க்கான மருந்துகள் போன்றவற்றால் ரத்த அழுத்தம் குறையலாம்.
ரத்த அழுத்த மாத்திரைகள்
உயர் ரத்த அழுத்த நோய்க்குத் தரப்படுகிற மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலும் ரத்த அழுத்தம் குறைந்துவிடும்
அதிர்ச்சி நிலை
இதயம், நுரையீரல், சிறுநீரகம், தானியங்கி நரம்புகள், ரத்த ஓட்டம் போன்றவற்றில் ஏற்படும் பிரச்னைகளால் குறை ரத்த அழுத்தம் ஏற்படும்போது உடலில் அதிர்ச்சி நிலை (Shock) உருவாகும். இதுபோல் மருந்து ஒவ்வாமை, விஷக்கடிகளாலும் இம்மாதிரியான அதிர்ச்சி நிலை உருவாவது உண்டு. இதுதான் ஆபத்தைத் தரும்.
👉இருக்கை நிலை சார்ந்த குறை ரத்த அழுத்தம்
சிலருக்குப் படுக்கையை விட்டு எழுந்ததும் அல்லது கழிப்பறையில் கழிப்பிடத்திலிருந்து எழுந்ததும் கண்கள் இருட்டாவதுபோல் உணர்வது, தலைச்சுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றும். இதுவும் குறை ரத்த அழுத்தம் காரணமாக ஏற்படுவதுதான். இதற்கு ‘இருக்கை நிலை சார்ந்த குறை ரத்த அழுத்தம்’ (Postural hypotension) என்று பெயர். இது 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மிகவும் சகஜம். இது இளம் வயதினருக்கும் வரலாம். நீண்ட நேரம் கால்களை மடக்கித் தரையில் அமர்ந்துவிட்டு, திடீரென்று எழுந்து நின்றால் இவ்வாறு குறை ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயக்கம் வரும். சில மாத்திரை மருந்துகளாலும், உறக்கமின்மை போன்ற உடல் சார்ந்த கோளாறுகளாலும் இது ஏற்படுவதுண்டு.
👉உணவுக்குப் பின் குறை ரத்த அழுத்தம்
சிலருக்கு உணவு சாப்பிட்டதும் ரத்த அழுத்தம் குறைந்துவிடும் (Postprandial hypotension). இது பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுவதுண்டு. தானியங்கி நரம்புக் குறைபாடு உள்ளவர்களுக்கும் பார்க்கின்சன் நோயாளிகளுக்கும் இது ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். உணவை சாப்பிட்டதும் அதை செரிமானம் செய்ய குடலுக்கு அதிக அளவில் ரத்தம் வந்துவிடும். இதனால் இதயம் மற்றும் மூளைக்குச் செல்ல வேண்டிய ரத்தம் குறைந்துவிடும். அப்போது ரத்த அழுத்தம் குறைந்துவிடும். இதைத் தவிர்க்க சிறிது சிறிதாக அடிக்கடி உணவு சாப்பிட வேண்டும். மாவுச் சத்து நிறைந்த, கொழுப்புச் சத்து குறைந்த உணவுகளை சாப்பிட வேண்டியதும் முக்கியம்.
👉 என்ன செய்யலாம்
அடிப்படை காரணத்தை சரி செய்தால் மட்டுமே குறை ரத்த அழுத்தம் சரியாகும். எனவே, காரணத்தைச் சரியாக கணித்து சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். மருத்துவரின் ஆலோசனைப்படி உணவில் உப்பை சிறிதளவு அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
கால்களுக்கு மீளுறைகளை (Stockings) அணிந்து கொள்வது நல்லது.
சிறு தானியங்கள், காய்கறி, பழங்கள் கலந்த சரிவிகித உணவை உண்ண வேண்டும்.
குறை ரத்த அழுத்த நோயைக் குணப்படுத்த சில மாத்திரைகளும் உள்ளன. அவற்றை குடும்ப மருத்துவரின் பரிந்துரையின்படி சாப்பிடலாம்.
👉பொதுவான யோசனைகள்
குறை ரத்த அழுத்தம் காரணமாக தலைச்சுற்றல், மயக்கம் வரும்போது காபி அல்லது தேநீர் குடிக்கலாம். தற்காலிகமாக இவை ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். நீண்ட நேரம் கால்களை மடக்கித் தரையில் உட்காராதீர்கள். இடையிடையில் எழுந்து செல்லுங்கள். நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்பதும் கூடாது. வெயிலில் அளவுக்கு அதிகமாக அலையவும் விளையாடவும் கூடாது.
கடுமையான உடற்பயிற்சிகள், `ஜிம்னாஸ்டிக்’, ‘கம்பிப் பயிற்சிகள்’ போன்ற தசைப் பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடாது. சரியான அளவுக்கு ஓய்வும் உறக்கமும் அவசியம். ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பு மற்றும் ரத்த சர்க்கரை அளவுகளை நல்ல கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள். புகைப்பிடிக்காதீர்கள். மது அருந்தாதீர்கள்.
போதை மாத்திரைகளை சாப்பிடாதீர்கள். தலை சுற்றுவதுபோல் உணர்ந்தால், உடனே தரையில் படுத்துக்கொள்ளுங்கள். கால்களைச் சற்று உயரமாக வைத்துக்கொள்ளுங்கள். படுக்க முடியாத நிலைமைகளில் தரையில் உட்கார்ந்து கொண்டு, உடலை முன்பக்கமாக சாய்த்து, முழங்கால்களை மடக்கி, கால்களுக்கு இடையில் தலையை வைத்துக்கொள்ளுங்கள்.
படுக்கையை விட்டு சட்டென்று உடனே எழ வேண்டாம். சிறிது நேரம் மூச்சை நன்றாக உள் இழுத்து, பிறகு வெளியில்விட்டு, மெதுவாக எழுந்திருங்கள். எழுந்திருக்கும்போது நேராக எழுந்திருக்காமல், பக்கவாட்டில் முதலில் படுத்துக் கொண்டு அந்தப் பக்கவாட்டிலேயே எழுந்திருங்கள். எழுந்தவுடனேயே நடந்துசெல்ல வேண்டாம்.
படுக்கையில் சிறிது நேரம் உட்கார்ந்த பிறகு நடந்தால் தலைச்சுற்றல் ஏற்படாது. படுக்கையிலிருந்து எழுந்ததும் எதையாவது எடுப்பதற்குக் கீழ்நோக்கிக் குனியவோ, சட்டென்று திரும்பவோ முயற்சிக்காதீர்கள். தலைக்குத் தலையணை வைக்காதீர்கள். உடலின் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு உடனடியாக மாறாதீர்கள். உதாரணத்துக்கு, புரண்டு படுக்கும்போது திடீரெனப் புரளாதீர்கள்.
அடிக்கடி தலைச்சுற்றல் பிரச்னை உள்ளவர்கள், வீட்டுக் கழிப்பறை, குளியலறை போன்ற இடங்களில் பிடிமானக் கம்பிகளைச் சுவற்றில் பதித்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் தலைச்சுற்றல் வரும்போது இந்தக் கம்பிகளைப் பிடித்துக்கொள்வதன் மூலம் கீழே விழுவதைத் தடுக்க முடியும். வழுக்காத தரைவிரிப்புகளையே வீட்டிலும், குளியலறை மற்றும் கழிப்பறைகளிலும் பயன்படுத்துங்கள்.
இரவு விளக்குகளைப் பயன்படுத்துங்கள். அடிக்கடி மாடிப்படிகளில் ஏறி, இறங்குவதைக் குறைத்துக்கொள்ளுங்கள். ரோலர் கோஸ்டர் போன்ற ராட்டினங்களில் சுற்றுவதைத் தவிருங்கள். மருத்துவர் பரிந்துரை செய்யாமல் நீங்களாகவே சுய மருத்துவம் செய்யாதீர்கள்
 குறைவான ரத்த அழுத்தம் இருப்பவர்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள்.👇
பட்டாணி
பட்டாணி ரத்த அழுத்தத்தை அதிகரிக்க உதவிடும். இதில் ப்ரோட்டீன், விட்டமின்ஸ் மற்றும் ஃபோலிக் அமிலம் இருக்கிறது. ஒட்டுமொத்த இதய பராமரிப்பிற்கும் இது உதவிடும். பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் சாயமேற்றப்பட்ட பட்டாணியை விட பச்சை பட்டாணியை வாங்கி உரித்து சமைத்தால் நல்லது.
உருளைக்கிழங்கு
நம் உடலிலிருந்து வெகுவான ஸ்டார்ச் குறைவதாலேயே குறைந்த ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. ஸ்டார்ச் அதிகமிருக்கும் உருளைக்கிழங்கு எடுத்துக் கொண்டால் குறைந்த ரத்த அழுத்தம் பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம்.
அதற்காக தொடர்ந்து உருளைக்கிழங்கு எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விடாதீர்கள். பின் அது வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்திடும்.
பப்பாளி
குறைந்த ரத்த அழுத்தத்தை சரி செய்ய விட்டமின் சி உணவுகளை நிறைய எடுத்துக் கொள்ளலாம். ஆரஞ்சு பழத்தை விட பப்பாளிப் பழத்தில் நிறைய விட்டமின்கள் நிறைந்திருக்கிறது. அதைவிட பப்பாளியில் அதிகளவு விட்டமின் மற்றும் மினரல்ஸ் இருக்கின்றன.
இதிலிருக்கும் அமினோ அமிலங்கள் மற்றும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சமன் செய்திடும்.
கொய்யாப் பழம்
மதிய உணவிற்கு முன்பு கொய்யாப்பழத்தை சாப்பிடலாம். சிலருக்கு, குறிப்பாக அறுபது வயதைக் கடந்தவர்களுக்கு உணவு சாப்பிட்டவுடன் ரத்த அழுத்தம் குறையும்.
இவர்கள் சாப்பிட அரை மணி நேரத்திற்கு முன்பாக கொய்யாப்பழம் சாப்பிட்டால் குறைவான ரத்த அழுத்தத்திலிருந்து தப்பிக்கலாம்.
இதில் அதிகளவு பொட்டாசியம் இருக்கிறது அவற்றுடன் இதிலிருக்கும் ஃபைபர் உணவு செரிமானத்திற்கும் உதவிடும்.
தயிர்
தயிரில் இருக்கும் பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் ஆகியவை ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவிடும். லஸ்ஸி தயாரித்து குடிக்கலாம். குறைந்த ரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் தென்பட்ட நேரத்தில் மட்டும் தயிர் எடுக்காமல் தொடர்ந்து உணவில் சேர்ந்து வர வேண்டும்.
தக்காளி
நம் அன்றாட உணவில் தக்காளி முக்கிய இடம் வகிக்கிறது. சருமத்திற்கும் உடல் நலனுக்கும் ஏராளமான நன்மைகளை செய்கிறது. தக்காளியில் இருக்கக்க்கூடிய லைகோபென் என்ற சத்து குறைந்த ரத்த அழுத்தத்திலிருந்து உங்களை காப்பாற்றும்.
அவகேடோ
அவகேடோ ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவிடுகிறது. இதிலிருக்கும் பொட்டாசியம், ஃபைபர், மோனோ அன் சாச்சுரேட்டட் ஃபேட் ஆகியவை இதில் அதிகம்.
உணவின் இடைவேளையின் போது இதனை எடுத்துக் கொள்ளலாம். அவகேடோ சாப்பிடுவதால் நீண்ட நேரம் பசி எடுக்காது.
கேரட்
கேரட் சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால், கேரட் சாப்பிட்டால் சீரான ரத்த அழுத்தத்திற்கு கியாரண்டி என்று தெரியுமா?
இதிலிருக்கும் இரண்டு முக்கியச் சத்துக்களான பொட்டாசியம் மற்றும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் குறைவான ரத்த அழுத்தத்திலிருந்து நம்மை மீட்டு வரும். கேரட்டில் மட்டுமே இருக்கக்கூடிய ஒரு வகை ஃபைபர் உணவை விரைவாக செரிக்க வைக்கும்.
தர்பூசணிப் பழம்
தர்பூசணிப்பழம் சீசன் பழமாதலால் அது கிடைக்கும் காலத்தில் தவறாமல் வாங்கிச் சாப்பிடுங்கள். இதிலிருக்கும் L-citrulline ரத்த நாளங்களை சீராக இயங்க உதவுகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் தர்பூசணிப்பழம் சாப்பிட்டு வந்தால் நல்லது.
கிஸ்மிஸ் பழம்
மிகவும் சத்தான ஸ்நாக்ஸ் இது. ஓய்வு நேரங்களில் நொறுக்குத் தீனிகளை எடுப்பதை விட மிகவும் கிஸ்மிஸ் பழம் உட்பட நட்ஸ் வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் பொட்டாசியம் கண்டண்ட் இருப்பதுடன் சர்க்கரைச் சத்தும் இருப்பதால் ரத்த அழுத்தம் குறைவாவதை தடுக்க முடியும்.
டார்க் சாக்லெட்
ஸ்ட்ரஸ் குறைத்திடும் டார்க் சாக்லேட் வகையினை சாப்பிடலாம். எப்போதும் கையில் சாக்லெட் வைத்திருங்கள். லோ பிரசர் ஆகும் அறிகுறி தெரிந்தால் உடனேயே சாக்லேட் சாப்பிடுங்கள். ஆனால் தொடர்ந்து தினமும் சாப்பிட வேண்டாம்.
பீட்ரூட்
பீட்ரூட்டில் இரும்புச்சத்து, ஃபோலேட், வைட்டமின் 12 போன்ற இரத்தணுக்களின் உற்பத்திற்கு வேண்டிய சத்துக்கள் வளமாக உள்ளது.
ஆகவே உடலில் இரத்தணுக்களின் அளவு சீராக இருக்க நினைத்தால், பீட்ரூட் ஜூஸை அடிக்கடி குடித்து வாருங்கள்.
முக்கியமாக இரத்த சோகை உள்ளவர்கள், இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடலில் இரத்தத்தின் அளவு வேகமாக அதிகரிக்கும்.
💚 low பிரஷர் குணமாக……
💊 low பிரஷர் சூரணம் 💊
1.லேசாக வறுத்த சீரகம் 100கி,
2.லேசாக வறுத்த ஏல அரிசி 50கி,
3.பச்சை கற்பூரம் 25கி இதை நன்கு கல்வத்தில் அரைத்து பின் மேற்கண்ட பொருள்களையும் சேர்த்து நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொண்டு,
4.சுக்கு 10கி
5.மிளகு 10கி
6.திப்பிலி 10கி
7.கொத்தமல்லி 20கி
8. அமுக்கிரா 20கி
4 முதல் 8 வரை உள்ளவற்றை நன்கு சூரணித்து பின் மேலுள்ள 1 முதல் 3 வரையுள்ள கலவையையும் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக்கி வைத்துக்கொண்டு காலை இரவு 1 கிராம் அளவு உணவுக்குப் பின்பு……
low பிரஷர் நாட்டுக்கோழி சூப் அல்து மிளகு ரசத்திலும் அருந்தவும்.
👉ஒரு கிளாஸ் வெந்நீரில், அரை துண்டு எலுமிச்சை பழத்தை பிழிந்து, அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு கல் உப்பு சேர்த்து நன்றாக கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, இந்த குறைந்த இரத்த அழுத்தம் பிரச்சனை சரியாகிவிடும்.
👉10 பாதாம் பருப்புகளை தோல் நீக்கி, நன்கு பேஸ்ட்டு போல் அரைத்து கொள்ளுங்கள், பின் அவற்றை பாலுடன் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, அருந்திவர குறைந்த இரத்த அழுத்தம் பிரச்சனை சரியாகிவிடும்.
👉குறைந்த ரத்த அழுத்தம் நோய் குணமாக தினமும் சாப்பிடும் உணவில் 10 மில்லி ரோஸ்மேரி எண்ணெயை சேர்த்து கொள்ளுங்கள்.
இவ்வாறு ரோஸ்மேரி எண்ணெயை உணவில் சேர்த்து கொள்வதினால் குறைந்த இரத்த அழுத்தம் நோய் சீராகும்.
👉இரண்டு கேரட்டினை சிறு, சிறு துண்டுகளாக கட் செய்து, மிக்சியில் ஜூஸ் போல் அடித்து எடுத்து கொள்ளுங்கள் அதனுடன் தேவையான அளவு தேன் கலந்து தினமும் அருந்திவர குறைந்த இரத்த அழுத்தம் சரியாகிவிடும்.
👉ஒரு இஞ்சியை நன்றாக தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின் அவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு நாள் முழுவது நன்றாக சூரிய வெளிச்சத்தில் காயவைக்கவும்.
பின் மறுநாள் அவற்றை ஒரு பாட்டிலில் மாற்றி அந்த இஞ்சி துண்டுகள் நன்றாக முழுகும் அளவிற்கு தேனில் ஒரு நாள் முழுவதும் ஊறவைக்க வேண்டும்.
பின் இந்த இஞ்சி துண்டுகளை தினமும் சாப்பிட பிறகு ஒரு துண்டு எடுத்து சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு சாப்பிடுவதினால் இரத்த அழுத்தம் பிரச்சனை குணமாகும்