புதன், 19 பிப்ரவரி, 2020

இரத்த அழுத்தம் குறைய……!!

இரத்த அழுத்தம் குறைய……


இரத்த அழுத்தம் இரத்தக் கொதிப்பு குணமாக……



செம்பருத்தி பூ (Hibiscus flower) என்பது இந்திய மக்களிடையே பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை. இதன் சாறு, தேநீர் அல்லது கஷாயம் வடிவத்தில் அருந்துவது பல மருத்துவ நன்மைகளை தரும் என்று நாட்டு மருந்து மற்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

செம்பருத்தி பூவின் நன்மைகள்:

1. இரத்த அழுத்தத்தை குறைக்கும் (Blood Pressure):

  • செம்பருத்தி பூவில் உள்ள anthocyanins மற்றும் polyphenols என்ற பொருட்கள் இரத்தக் குழாய்களை சுருங்கவைக்கும் செயல்பாட்டைக் குறைத்து, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

  • சில ஆய்வுகளில், தினமும் செம்பருத்தி தேநீர் அருந்தும் பழக்கம் இரத்த அழுத்தத்தை மிதமாக குறைக்கும் என்று தெரியவந்துள்ளது.

2. கொழுப்பைக் கரைக்கும் (Fat Burning):

  • செம்பருத்தி பூவில் உள்ள hibiscus acid மற்றும் flavonoids உடலில் கொழுப்பை சிதைக்க உதவுகிறது.

  • இது lipid metabolism-ஐ மேம்படுத்தி, சிறுநீரின் ஊடாக வெளியேற்ற உதவுகிறது.

  • இதன் சிறுநீரிழிவு கட்டுப்படுத்தும் தன்மையால், உடலில் இன்சுலின் எதிர்ப்பு (insulin resistance) குறைவதற்கும் இது பயனுள்ளதாக இருக்கலாம்.


பயன்படுத்தும் முறை:

செம்பருத்தி தேநீர் (Hibiscus Tea):

  • ஒரு கைப்பிடி உலர்ந்த செம்பருத்தி பூவைக் கொதிக்கும் நீரில் 5-10 நிமிடம் விட்டுக்கொள்ளவும்.

  • வடிகட்டிய பின், தேவைப்பட்டால் சிறிது தேன் சேர்த்துக்கொள்ளலாம் (சர்க்கரை வேண்டாம்).

  • தினமும் 1-2 முறை பருகலாம் (மிகுதியால் தலையிருக்கும் அல்லது இரத்த அழுத்தம் மிக குறையலாம்).


கவனிக்க வேண்டியவை:

  • இரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்கள் தொடர்ந்து குடிக்க வேண்டாம் – அது மேலும் குறைக்க வாய்ப்பு உள்ளது.

  • கர்ப்பிணிகள், உயர் மருத்து உட்கொள்பவர்கள் முன்பாக மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.

  • சிலருக்கு இது அலர்ஜி ஏற்படுத்தக்கூடும் – ஆரம்பத்தில் சிறு அளவில் முயற்சி செய்யவும்.


பிரஷர் சூரணம்

தேவையான பொருள்கள்
1.லேசாக வறுத்த சீரகம் 100கி,
2.லேசாக வறுத்த ஏல அரிசி 50கி,
3.பச்சை கற்பூரம் 25கி இதை நன்கு கல்வத்தில் அரைத்து பின் மேற்கண்ட பொருள்களையும் சேர்த்து நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொண்டு,
4.சுக்கு 10கி
5.மிளகு 10கி
6.திப்பிலி 10கி
7.கொத்தமல்லி 20கி
8. அமுக்கிரா 20கி
செய்முறை

    • 4 முதல் 8 வரை உள்ளவற்றை நன்கு சூரணித்து பின் மேலுள்ள 1 முதல் 3 வரையுள்ள கலவையையும் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக்கி வைத்துக்கொண்டு காலை இரவு 1 கிராம் அளவு உணவுக்குப் பின்பு……

    எப்படி பயன்படுத்துவது

    • high பிரஷர் உள்ளபோது எலுமிச்சை சாற்றிலும்,
    • low பிரஷர் உள்ளபோது நாட்டுக்கோழி சூப் அல்து மிளகு ரசத்திலும் அருந்தவும்.
    • ரத்த அழுத்தம் விரைவில் சமநிலையை அடையும்.
    • என்ன பிரஷர் என்றே தெரியாத போது உடல் குளிர்ந்திருந்தால் வெந்நீரிலும்,
    • உடல் சூடாக இருந்தால் குளிர்ந்த நீரிலும் அருந்த வேண்டும்.
    • பலருக்கும் கொடுத்து நல்ல பலனை கண்டுள்ளேன் நன்கு அனுபவித்த மருந்து.

    பிரஷர் சூரணம்

    தேவையான பொருள்கள்
    • சீரகம் 100 கிராம் அல்லது தேவையான அளவு
    • எலுமிச்சை பழச்சாறு மூழ்கும் அளவு
    • கண்ணாடி பாத்திரத்தில் தேவையான அளவு எலுமிச்சை சாறு ஊற்றி எடுத்துக் கொள்ளவும்.
    • தேவையான அளவு சீரகத்தை வெறும் வாணலியில் போட்டு லேசாக சூடு படுத்தி (பொன்னிறமாக வறுக்க வேண்டாம் லேசாக சூடு படுத்தினால் போதும் ) எடுத்துக் கொள்ளவும்.
    செய்முறை
    • கண்ணாடிப் பாத்திரத்தில் உள்ள எலுமிச்சை சாற்றில் மூழ்கும்படி சூடு படுத்திய சீரகத்தைப் போட்டு பாத்திரத்தின் வாயை வெள்ளைத் துணியால கட்டி மூடவும்
    • எலுமிச்சை சாறு வற்றி சீரகம் நன்கு காயும் வரை இதை அப்படியே நாள் தோறும் வெயிலில் வைத்து வரவும்
    • நன்கு காய்ந்த இந்த சீரகத்தை (லேசாக சூடு படுத்தி எலுமிச்சை சாற்றில் ஊறி காய்ந்த )நன்கு அரைத்து தூளாக எடுத்து பத்திரப் படுத்தவும்

    எப்படி பயன்படுத்துவது
    • இந்த மருத்துவ குணம் நிறைந்த சீரகத்தை நாள்தோறும் காலை மாலை என இரண்டு வேளைகள் ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வர உயர் இரத்த அழுத்தம் அற்புதமாக கட்டுக்குள் வரும்.

    இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் குறைய

    தேவையான பொருட்கள்
    • இஞ்சி - 1 துண்டு (துருவியது)
    • பூண்டு - 1 (துருவியது)
    • ஆப்பிள் சீடர் வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்
    • தேன் - 1 டீஸ்பூன்
    • எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
    செய்முறை
    • மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு 30 நொடிகள் அரைக்கவும். பின் அதனை ஒரு டப்பாவில் போட்டு 5 நாட்கள் ஃப்ரிட்ஜில் வைத்து, பின் உட்கொள்ளவும்.

    எப்படி பயன்படுத்துவது
    • இந்த மருந்தை தினமும் இருவேளை எடுக்க வேண்டும். அதிலும் காலையில் எழுந்தும் வெறும் வயிற்றில் 1 டேபிள் ஸ்பூன் மற்றும் இரவு உணவு உண்பதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் 1 டேபிள் ஸ்பூன் என உட்கொள்ள வேண்டும்.
    • இச்செயலை தொடர்ந்து மூன்று நாட்கள் பின்பற்றி வந்தால், உடல் நன்கு புத்துணர்ச்சியுடனும், ஆற்றலுடனும் இருப்பது போன்று உணர்வதோடு, உங்களது உயர் இரத்த அழுத்தமும், உயர் கொலஸ்ட்ராலும் குறைந்திருப்பதை நன்கு காணலாம்.

    இரத்த கொதிப்பை குறைக்க

    தேவையானப் பொருள்கள்
    • பால்.
    • பூண்டு
    எப்படி பயன்படுத்துவது

      பசும் பாலில் 2 பல் பூண்டு நசுக்கிப் போட்டு காய்ச்சி இரவில் குடித்து வந்தால் இரத்த கொதிப்பும், கொழுப்பும் குறையும்.


      உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க

      தேவையானப் பொருள்கள்
        • வெண்தாமரை சூரணம்
        • ஏலரிசி - ஒரு பங்கு
        • சுக்கு - இரண்டு பங்கு
        • திப்பிலி - மூன்று பங்கு
        • அதிமதுரம் - நான்கு பங்கு
        • சதகுப்பை - ஐந்து பங்கு
        • சீரகம் - ஆறு பங்கு
        • வெண்தாமரை இதழ்கள் - 12 பங்கு
        எப்படி பயன்படுத்துவது
          • 1-2 கிராம் பாலுடன்.
          • இரத்த பித்தம் சுகமாகும்.

          உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க

          • முருங்கைக் கீரை சாறில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலையும் மாலையும் 2 கிராம் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தம் குறையும்.
          • வெந்தயத்தை முன் தினமே ஊற வைத்து தயிரோடு அரைத்து தலைக்கு தேய்த்தால் இரத்த கொதிப்பு இறங்கும்.
          • அகத்தி கீரையை தினமும் மதியம் மற்றும் இரவு உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பை கட்டுப்படுத்தலாம்.
          • தினமும் வெள்ளைப்பூண்டை ஏதாவது ஒரு வகையில் உணவில் உண்டு வந்தால், அது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் என்று தெரிய வந்துள்ளது. தவிர இரத்த அழுத்தத்திற்கான மாத்திரைகளை விடவும் வெள்ளைப்பூண்டு மிகவும் சக்தி வாய்ந்தது.
          •  கேரட் சாறு, ஆப்பிள் பழச்சாறு, மாம்பழச்சாறு மற்றும் பேரிக்காய் சாறுஆகியவற்றை நன்றாக கலந்து குடித்து வந்தால் உடல் வெப்பம் குறைந்து இரத்த அழுத்தம் குறையும்.
          •  சர்பகந்தா செடியின் வேரை உலர்த்தி பொடி செய்து 1 கிராம் அளவு எடுத்து சம அளவு நெல்லிக்காய் பொடி, கடுக்காய் பொடி மற்றும் தான்றிக்காய் பொடி ஆகியவற்றை நன்றாக கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.
          •  ஆரைக் கீரை சாற்றில் சீரகத்தை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் 5 கிராம் அளவுக்கு சாப்பிட்டால் இரத்த அழுத்தம் குறையும்.
          • முழு வெந்தயம் 1 கரண்டி ,பாசிபயறு 2 கரண்டி ,கோதுமை 2 கரண்டி, இவற்றை முதல்நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலை 2 மிளகு, கறிவேப்பிலை சேர்த்து அரைத்து , காலையில் வெறும் வயிற்றில் தோசை வார்த்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் குறையும்.
          • கருங்காலிப்பட்டை 100 கிராம், சதகுப்பை, சீரகம், ஏலக்காய் ஆகியவற்றை வகைக்கு 20 கிராம் எடுத்து ஒன்றாகக் கலந்து இளவறுப்பாய் வறுத்து தூள் செய்து 5 கிராம் அளவு தூளை இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, பாதியாகச் சுண்டச் காய்ச்சி சாப்பிட இரத்த அழுத்த நோய்கள் குறையும்.
          • தாமரைப்பூவை நன்கு சுத்தமாக்கி கஷாயம் செய்து அதனுடன் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் இரத்த கொதிப்பு குறையும்.
          •  குறைந்த இரத்த அழுத்தம் இருப்பவர்கள் ஜடமான்சி வேர், கற்பூரம் மற்றும் இலவங்கப்பட்டைகளை நன்றாக இடித்து போட்டு நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் குறைந்த இரத்த அழுத்தம் மாறும்.
          • கறிவேப்பிலையை நீர் விட்டு அரைத்து சாறு எடுத்து அதனுடன் சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து காலையில் குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.
          •  அகத்தி கீரை, சுண்ட வத்தல் ஆகியவைகளை சமைத்து அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.
          •  அருகம்புல்லை நன்கு சுத்தம் செய்து கழுவி சாறு எடுத்து அதனுடன் ஐந்து பங்கு சுத்தமான தண்ணீர் சோ்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.
          •  தினமும் காலையில் வெறும் வயிற்றில் 4 வெள்ளைப் பூண்டுப் பற்களை சாப்பிட இரத்த அழுத்தம் குறையும்.
          • முள்ளங்கியில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் அதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் முள்ளங்கி இரத்த அழுத்தத்தைக் குறையச் செய்யும்.
          • அதிகம் சத்தம் போட்டுப் பேசுவதை நிறுத்திவிட வேண்டும்.
          • இரத்த அழுத்தம் குறைய தினமும் ஒரு வாழைப் பழம் சாப்பிடுவது நல்லது.
          •  உப்பும் உப்புச் சார்ந்த ஊறுகாய், அப்பளம், நொறுக்குத் தீனிகள், கருவாடு போன்றவற்றைத் தவிர்த்து விடுதல் நல்லது.
          •  தினமும் 45 நிமிடம் நடைப் பயிற்சி செய்வது இரத்த அழுத்தத்தைக் குறையச் செய்யும்.
          •  உணவில் குறைந்த அளவு உப்பை சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
          •  தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட இரத்த அழுத்தம் குறையும்.
          •  எளிதில் சீரணமாகக்கூடிய உணவை மட்டுமே உண்ண வேண்டும்.
          •  உணவில் அதிகளவு கீரைகள், பழங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
          •  குறிப்பாக குப்பைக்கீரை, முருங்கைக் கீரை,சிறுகீரை போன்றவற்றைசாப்பிடவேண்டும்.
          • தினமும் உணவில் கறிவேப்பிலையை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.
          •  தினமும் யோகா மற்றும் தியானம் செய்து வந்தால் இரத்த அழுத்தம் பெருமளவு குறையும்.
          •  அளவுக்கதிகமாக உள்ள உடற்பருமனைக் குறைப்பதால் இரத்த அழுத்தம் குறையும்.
          •  புகை பிடித்தல், அளவுக்கதிகமாக மது அருந்துதல் முதலிய பழக்கங்களை நிறுத்துவதனால் இரத்த அழுத்தம் குறையும்....!!
          •  இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் நாள்தோறும் காலையில் 1-அவுன்ஸ் துளசிச் சாறெடுத்துச் சாப்பிடுவது நல்லது. உடலில் தடை பட்டிருக்கும் ரத்தக்குழாய்களைத் துளசிச் சாறு அகலப்படுத்த உதவுகிறது. இதனால் ரத்த-அழுத்தம் குறைந்து விடும்.
          •  மருதம் பட்டை, அளவில் பாதி சீரகம் சோம்பு, மஞ்சள் சேர்த்து பொடியாக்கி , காலை மாலை 6 கிராம் அளவு எடுத்து, 400 மில்லி தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து , தண்ணீர் அளவு 200 மில்லி ஆனதும் , பருகி வர, இரத்த அழுத்த நோய் உடலை விட்டு அகலும்.
           சேர்க்க வேண்டியவை
          • தினமும் காலையில் முருங்கைக்கீரையும், சிறிய வெங்காயமும் சேர்த்து சூப் சாப்பிடலாம். மதிய உணவில் 5 - 10 பூண்டுப்பற்கள், 50 கிராமுக்குக் குறையாமல் சிறிய வெங்காயம் சேர்த்துக்கொள்ளலாம். வாழைத்தண்டு, வாழைப்பூ, சுரைக்காய், பீர்க்கங்காய், பார்லி ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்ப்பது அவசியம். எண்ணெய் உணவில் குறைவாக சேர்க்கலாம்.
          • சீரகத்தை லேசாக வறுத்து அதை மூன்று நாட்கள் இஞ்சிச் சாறிலும், மூன்று நாட்கள் எலுமிச்சைச் சாறிலும் இன்னும் மூன்று நாட்கள் கரும்புச்சாறிலும் ஊறவைத்து உலர்த்திப் பொடித்துக்கொள்ளுங்கள். இந்த பொடியை காலை மாலை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வரலாம். கடைகளில் சீரக சூரணமாகவும் கிடைக்கும். வெந்தயத்தை தினமும் பொடித்து சப்பிடலாம்.
           தவிர்க்க வேண்டியவை
          • பல காய்கறிகளில் நமக்கு தேவையான உப்புச் சத்து அதிகம் உள்ளது. அதனால், மிகச் சிறிதளவே உப்பு சேர்த்தால் போதுமானது. ரத்தக் கொதிப்பு இருப்பவர்கள் உப்பை மறந்தே தீரவேண்டும். புலால் உணவைத் தவிர்ப்பது நல்லது. ஊறுகாய், இட்லி மிளகாய்ப் பொடி, அப்பளம்,


          கருத்துகள் இல்லை:

          கருத்துரையிடுக