குறைவான_ரத்த_அழுத்தம் Low_Pp_சரி_செய்வது_எப்படி…❓❓
👉 ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வு இன்று நம்மிடையே பெரும்பாலானோருக்கு இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் இருந்தால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் அதை விட மாரடைப்பு ஏற்படும் என்று எல்லாருக்கும் தெரிந்திருக்கும்.
இதே நேரத்தில் குறைந்த ரத்த அழுத்தம் பற்றி யாராவது கண்டு கொண்டிருக்கிறோமா❓ அது சத்துக்குறைபாடு என்று நினைத்து அப்படியே விட்டு விடுவோம். ஆனால் இது ஒரு சைலண்ட் கில்லர் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்.
🔴👉ரத்த அழுத்தம்
ரத்தம் இதயத்துக்கு வரும்போது ஒரு குறிப்பிட்ட வேகத்திலும், இதயத்திலிருந்து வெளியேறும்போது வேறு ஒரு வேகத்திலும் செல்கிறது. இதனைத் தான் நாம் ரத்த அழுத்தம் என்கிறோம்.
பொதுவாக, ஒருவருக்கு ரத்த அழுத்தம் 120/80 மி.மீ. இருந்தால், அது இயல்பு அளவு.
உலக சுகாதார நிறுவனம் ஒரு நபருக்கு 100/70 மி.மீ. முதல் 140/90 மி.மீ. வரை உள்ள ரத்த அழுத்தத்தை நார்மல் என்று வரையறை செய்துள்ளது.
இது 140/90 மி.மீ.க்கு மேல் அதிகரித்தால் அதை உயர் ரத்த அழுத்தம் என்றும், 90/60 மி.மீ. பாதரச அளவுக்குக் கீழ் குறைந்தால் அதைக் குறை ரத்த அழுத்தம் என்றும் சொல்கிறது.
⭕ குறைவாக ரத்த அழுத்தம்
காரணம்❓
காரணம்❓
இதயத்துக்குத் தேவையான ரத்தம் செல்ல தடை உண்டாவது தான்
குறை ரத்த அழுத்தம் ஏற்பட அடிப்படைக் காரணம்.
குறை ரத்த அழுத்தம் ஏற்பட அடிப்படைக் காரணம்.
தடகள வீரர்கள், கடுமையாக உடற்பயிற்சி செய்பவர்கள், தீவிரமாக ஜிம் பயிற்சி செய்பவர்கள், ஒல்லியான உடல்வாகு உள்ளவர்கள், கர்ப்பிணிகள், தைராய்டு பிரச்னை உள்ளவர்கள், வயதானவர்கள், படுக்கையில் நீண்ட காலம் படுத்திருப்பவர்கள் போன்றோருக்குக் குறை ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
👉அறிகுறிகள் ❓
தலைச்சுற்றல்,
மயக்கம்,
வாந்தி,
வழக்கத்துக்கு மாறான அதீத நாவறட்சி,
சோர்வு,
பலவீனம்,
கண்கள் இருட்டாவது போன்ற உணர்வு,
பார்வை குறைவது,
மனக்குழப்பம்,
வேலையில் கவனம் செலுத்த முடியாத நிலைமை,
உடல் சில்லிட்டுப்போவது,
மூச்சு வாங்குவது
போன்ற அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றோ அல்லது பல அறிகுறிகளோ உங்களால் உணர முடியும்.
இதனை சரி செய்ய வேண்டுமானால் அடிப்படை காரணத்தை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் அதனை தீர்க்க முடியும்.
பெரும்பாலும் குறைவான ரத்த அழுத்தத்திற்கு காரணம் சத்துக்குறைபாடாகவே இருக்கிறது.
⭕👉யாருக்கு, எப்போது வாய்ப்பு அதிகம்
❓கர்ப்பம்❗
கர்ப்பத்தின்போது கர்ப்பிணியின் உடலில் ரத்தக் குழாய்கள் அதிகம் விரிவடைவதால், ரத்த அழுத்தம் குறைகிறது. இதற்குப் பயப்படத் தேவையில்லை. பிரசவத்துக்குப் பிறகு இது சரியாகிவிடும்.
❓நீரிழப்பு❗
காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் விளையாட்டுகள், தீவிரமான தீக்காயங்கள், அக்னி நட்சத்திர வெயில் போன்றவை காரணமாக உடலில் நீரிழப்பு ஏற்படும்போது குறை ரத்த அழுத்தம் ஏற்படும்.
❓நோய்கள்❗
இதய வால்வு கோளாறுகள், இதயத் துடிப்புக் கோளாறுகள், மாரடைப்பு, இதயச் செயலிழப்பு போன்ற காரணங்களால் குறை ரத்த அழுத்தம் ஏற்படும். நுரையீரல் ரத்த உறைவுக்கட்டி (Pulmonary Embolism), சிறுநீரகச் செயல்இழப்பு, காலில் சிரை ரத்தக்குழாய் புடைப்பு நோய் (Varicose veins) போன்றவற்றாலும் தானியங்கி நரம்புகள் செயல்படாதபோதும் இது ஏற்படுகிறது.
❓விபத்துகள்❗
வீட்டில், சாலையில், அலுவலகத்தில், தண்ணீரில் ஏற்படும் விபத்துகளால் மூளை, முதுகுத் தண்டு வடம் மற்றும் நுரையீரலில் அடிபடும்போது அல்லது பாதிப்பு ஏற்படும்போது அங்குள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டு குறை ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
❓ஹார்மோன் கோளாறுகள்❗
தைராய்டு மற்றும் பிட்யூட்டரி குறைபாடுகள், பேரா தைராய்டு மற்றும் அட்ரீனல் கோளாறுகள், கட்டுப்படாத நீரிழிவு நோய், ரத்த சர்க்கரை தாழ்நிலை போன்றவை ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
❓ரத்தம் இழப்பு❗
விபத்துகள் மூலம் ரத்தம் இழப்பு ஏற்படும்போதும், டெங்கு காய்ச்சல், மூலநோய், இரைப்பைப் புண், குடல் புற்றுநோய், அளவுக்கு அதிகமான மாதவிலக்கு போன்ற உடல் நோய்களால் ரத்தம் இழக்கப்படும்போதும் குறை ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
❓தீவிர நோய்த்தொற்று❗
சில தொற்றுக் கிருமிகள் ரத்தத்தில் கலந்து நச்சுக்குருதி நிலையை (Septicaemia) உருவாக்கும். அப்போது ரத்த அழுத்தம் குறையும்.
❓ஒவ்வாமை❗
மருந்துகள், உணவுகள், விஷக்கடிகள் போன்றவற்றால் ஒவ்வாமை ஏற்படும்போதும் ரத்த அழுத்தம் திடீரென்று குறையும்.
❓சத்துக்குறைவு❗
ரத்தசோகை நோய் இருப்பவர்களுக்கும், வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலம் குறைவாக உள்ளவர்களுக்கும் ரத்த அழுத்தம் குறைவதுண்டு.
❓மருந்துகள்❗
சிறுநீரைப் பிரியச் செய்யும் மருந்துகள், மன அழுத்த நோய்க்கான மருந்துகள், ஆண்மைக் குறைவுக்குத் தரப்படுகிற ‘வயாகரா’ வகை மாத்திரைகள், பார்கின்சன் நோய்க்கான மருந்துகள் போன்றவற்றால் ரத்த அழுத்தம் குறையலாம்.
❓ரத்த அழுத்த மாத்திரைகள்❗
உயர் ரத்த அழுத்த நோய்க்குத் தரப்படுகிற மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலும் ரத்த அழுத்தம் குறைந்துவிடும்
❓அதிர்ச்சி நிலை❗
இதயம், நுரையீரல், சிறுநீரகம், தானியங்கி நரம்புகள், ரத்த ஓட்டம் போன்றவற்றில் ஏற்படும் பிரச்னைகளால் குறை ரத்த அழுத்தம் ஏற்படும்போது உடலில் அதிர்ச்சி நிலை (Shock) உருவாகும். இதுபோல் மருந்து ஒவ்வாமை, விஷக்கடிகளாலும் இம்மாதிரியான அதிர்ச்சி நிலை உருவாவது உண்டு. இதுதான் ஆபத்தைத் தரும்.
⭕👉இருக்கை நிலை சார்ந்த குறை ரத்த அழுத்தம்
சிலருக்குப் படுக்கையை விட்டு எழுந்ததும் அல்லது கழிப்பறையில் கழிப்பிடத்திலிருந்து எழுந்ததும் கண்கள் இருட்டாவதுபோல் உணர்வது, தலைச்சுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றும். இதுவும் குறை ரத்த அழுத்தம் காரணமாக ஏற்படுவதுதான். இதற்கு ‘இருக்கை நிலை சார்ந்த குறை ரத்த அழுத்தம்’ (Postural hypotension) என்று பெயர். இது 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மிகவும் சகஜம். இது இளம் வயதினருக்கும் வரலாம். நீண்ட நேரம் கால்களை மடக்கித் தரையில் அமர்ந்துவிட்டு, திடீரென்று எழுந்து நின்றால் இவ்வாறு குறை ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயக்கம் வரும். சில மாத்திரை மருந்துகளாலும், உறக்கமின்மை போன்ற உடல் சார்ந்த கோளாறுகளாலும் இது ஏற்படுவதுண்டு.
⭕👉உணவுக்குப் பின் குறை ரத்த அழுத்தம்
சிலருக்கு உணவு சாப்பிட்டதும் ரத்த அழுத்தம் குறைந்துவிடும் (Postprandial hypotension). இது பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுவதுண்டு. தானியங்கி நரம்புக் குறைபாடு உள்ளவர்களுக்கும் பார்க்கின்சன் நோயாளிகளுக்கும் இது ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். உணவை சாப்பிட்டதும் அதை செரிமானம் செய்ய குடலுக்கு அதிக அளவில் ரத்தம் வந்துவிடும். இதனால் இதயம் மற்றும் மூளைக்குச் செல்ல வேண்டிய ரத்தம் குறைந்துவிடும். அப்போது ரத்த அழுத்தம் குறைந்துவிடும். இதைத் தவிர்க்க சிறிது சிறிதாக அடிக்கடி உணவு சாப்பிட வேண்டும். மாவுச் சத்து நிறைந்த, கொழுப்புச் சத்து குறைந்த உணவுகளை சாப்பிட வேண்டியதும் முக்கியம்.
👉 என்ன செய்யலாம்❓
அடிப்படை காரணத்தை சரி செய்தால் மட்டுமே குறை ரத்த அழுத்தம் சரியாகும். எனவே, காரணத்தைச் சரியாக கணித்து சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். மருத்துவரின் ஆலோசனைப்படி உணவில் உப்பை சிறிதளவு அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
கால்களுக்கு மீளுறைகளை (Stockings) அணிந்து கொள்வது நல்லது.
சிறு தானியங்கள், காய்கறி, பழங்கள் கலந்த சரிவிகித உணவை உண்ண வேண்டும்.
குறை ரத்த அழுத்த நோயைக் குணப்படுத்த சில மாத்திரைகளும் உள்ளன. அவற்றை குடும்ப மருத்துவரின் பரிந்துரையின்படி சாப்பிடலாம்.
⭕👉பொதுவான யோசனைகள்
குறை ரத்த அழுத்தம் காரணமாக தலைச்சுற்றல், மயக்கம் வரும்போது காபி அல்லது தேநீர் குடிக்கலாம். தற்காலிகமாக இவை ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். நீண்ட நேரம் கால்களை மடக்கித் தரையில் உட்காராதீர்கள். இடையிடையில் எழுந்து செல்லுங்கள். நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்பதும் கூடாது. வெயிலில் அளவுக்கு அதிகமாக அலையவும் விளையாடவும் கூடாது.
கடுமையான உடற்பயிற்சிகள், `ஜிம்னாஸ்டிக்’, ‘கம்பிப் பயிற்சிகள்’ போன்ற தசைப் பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடாது. சரியான அளவுக்கு ஓய்வும் உறக்கமும் அவசியம். ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பு மற்றும் ரத்த சர்க்கரை அளவுகளை நல்ல கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள். புகைப்பிடிக்காதீர்கள். மது அருந்தாதீர்கள்.
போதை மாத்திரைகளை சாப்பிடாதீர்கள். தலை சுற்றுவதுபோல் உணர்ந்தால், உடனே தரையில் படுத்துக்கொள்ளுங்கள். கால்களைச் சற்று உயரமாக வைத்துக்கொள்ளுங்கள். படுக்க முடியாத நிலைமைகளில் தரையில் உட்கார்ந்து கொண்டு, உடலை முன்பக்கமாக சாய்த்து, முழங்கால்களை மடக்கி, கால்களுக்கு இடையில் தலையை வைத்துக்கொள்ளுங்கள்.
படுக்கையை விட்டு சட்டென்று உடனே எழ வேண்டாம். சிறிது நேரம் மூச்சை நன்றாக உள் இழுத்து, பிறகு வெளியில்விட்டு, மெதுவாக எழுந்திருங்கள். எழுந்திருக்கும்போது நேராக எழுந்திருக்காமல், பக்கவாட்டில் முதலில் படுத்துக் கொண்டு அந்தப் பக்கவாட்டிலேயே எழுந்திருங்கள். எழுந்தவுடனேயே நடந்துசெல்ல வேண்டாம்.
படுக்கையில் சிறிது நேரம் உட்கார்ந்த பிறகு நடந்தால் தலைச்சுற்றல் ஏற்படாது. படுக்கையிலிருந்து எழுந்ததும் எதையாவது எடுப்பதற்குக் கீழ்நோக்கிக் குனியவோ, சட்டென்று திரும்பவோ முயற்சிக்காதீர்கள். தலைக்குத் தலையணை வைக்காதீர்கள். உடலின் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு உடனடியாக மாறாதீர்கள். உதாரணத்துக்கு, புரண்டு படுக்கும்போது திடீரெனப் புரளாதீர்கள்.
அடிக்கடி தலைச்சுற்றல் பிரச்னை உள்ளவர்கள், வீட்டுக் கழிப்பறை, குளியலறை போன்ற இடங்களில் பிடிமானக் கம்பிகளைச் சுவற்றில் பதித்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் தலைச்சுற்றல் வரும்போது இந்தக் கம்பிகளைப் பிடித்துக்கொள்வதன் மூலம் கீழே விழுவதைத் தடுக்க முடியும். வழுக்காத தரைவிரிப்புகளையே வீட்டிலும், குளியலறை மற்றும் கழிப்பறைகளிலும் பயன்படுத்துங்கள்.
இரவு விளக்குகளைப் பயன்படுத்துங்கள். அடிக்கடி மாடிப்படிகளில் ஏறி, இறங்குவதைக் குறைத்துக்கொள்ளுங்கள். ரோலர் கோஸ்டர் போன்ற ராட்டினங்களில் சுற்றுவதைத் தவிருங்கள். மருத்துவர் பரிந்துரை செய்யாமல் நீங்களாகவே சுய மருத்துவம் செய்யாதீர்கள்
⭕ குறைவான ரத்த அழுத்தம் இருப்பவர்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள்.👇
⭐பட்டாணி
பட்டாணி ரத்த அழுத்தத்தை அதிகரிக்க உதவிடும். இதில் ப்ரோட்டீன், விட்டமின்ஸ் மற்றும் ஃபோலிக் அமிலம் இருக்கிறது. ஒட்டுமொத்த இதய பராமரிப்பிற்கும் இது உதவிடும். பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் சாயமேற்றப்பட்ட பட்டாணியை விட பச்சை பட்டாணியை வாங்கி உரித்து சமைத்தால் நல்லது.
⭐உருளைக்கிழங்கு
நம் உடலிலிருந்து வெகுவான ஸ்டார்ச் குறைவதாலேயே குறைந்த ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. ஸ்டார்ச் அதிகமிருக்கும் உருளைக்கிழங்கு எடுத்துக் கொண்டால் குறைந்த ரத்த அழுத்தம் பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம்.
அதற்காக தொடர்ந்து உருளைக்கிழங்கு எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விடாதீர்கள். பின் அது வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்திடும்.
⭐பப்பாளி
குறைந்த ரத்த அழுத்தத்தை சரி செய்ய விட்டமின் சி உணவுகளை நிறைய எடுத்துக் கொள்ளலாம். ஆரஞ்சு பழத்தை விட பப்பாளிப் பழத்தில் நிறைய விட்டமின்கள் நிறைந்திருக்கிறது. அதைவிட பப்பாளியில் அதிகளவு விட்டமின் மற்றும் மினரல்ஸ் இருக்கின்றன.
இதிலிருக்கும் அமினோ அமிலங்கள் மற்றும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சமன் செய்திடும்.
⭐கொய்யாப் பழம்
மதிய உணவிற்கு முன்பு கொய்யாப்பழத்தை சாப்பிடலாம். சிலருக்கு, குறிப்பாக அறுபது வயதைக் கடந்தவர்களுக்கு உணவு சாப்பிட்டவுடன் ரத்த அழுத்தம் குறையும்.
இவர்கள் சாப்பிட அரை மணி நேரத்திற்கு முன்பாக கொய்யாப்பழம் சாப்பிட்டால் குறைவான ரத்த அழுத்தத்திலிருந்து தப்பிக்கலாம்.
இதில் அதிகளவு பொட்டாசியம் இருக்கிறது அவற்றுடன் இதிலிருக்கும் ஃபைபர் உணவு செரிமானத்திற்கும் உதவிடும்.
⭐தயிர்
தயிரில் இருக்கும் பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் ஆகியவை ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவிடும். லஸ்ஸி தயாரித்து குடிக்கலாம். குறைந்த ரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் தென்பட்ட நேரத்தில் மட்டும் தயிர் எடுக்காமல் தொடர்ந்து உணவில் சேர்ந்து வர வேண்டும்.
⭐தக்காளி
நம் அன்றாட உணவில் தக்காளி முக்கிய இடம் வகிக்கிறது. சருமத்திற்கும் உடல் நலனுக்கும் ஏராளமான நன்மைகளை செய்கிறது. தக்காளியில் இருக்கக்க்கூடிய லைகோபென் என்ற சத்து குறைந்த ரத்த அழுத்தத்திலிருந்து உங்களை காப்பாற்றும்.
⭐அவகேடோ
அவகேடோ ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவிடுகிறது. இதிலிருக்கும் பொட்டாசியம், ஃபைபர், மோனோ அன் சாச்சுரேட்டட் ஃபேட் ஆகியவை இதில் அதிகம்.
உணவின் இடைவேளையின் போது இதனை எடுத்துக் கொள்ளலாம். அவகேடோ சாப்பிடுவதால் நீண்ட நேரம் பசி எடுக்காது.
⭐கேரட்
கேரட் சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால், கேரட் சாப்பிட்டால் சீரான ரத்த அழுத்தத்திற்கு கியாரண்டி என்று தெரியுமா?
இதிலிருக்கும் இரண்டு முக்கியச் சத்துக்களான பொட்டாசியம் மற்றும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் குறைவான ரத்த அழுத்தத்திலிருந்து நம்மை மீட்டு வரும். கேரட்டில் மட்டுமே இருக்கக்கூடிய ஒரு வகை ஃபைபர் உணவை விரைவாக செரிக்க வைக்கும்.
⭐தர்பூசணிப் பழம்
தர்பூசணிப்பழம் சீசன் பழமாதலால் அது கிடைக்கும் காலத்தில் தவறாமல் வாங்கிச் சாப்பிடுங்கள். இதிலிருக்கும் L-citrulline ரத்த நாளங்களை சீராக இயங்க உதவுகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் தர்பூசணிப்பழம் சாப்பிட்டு வந்தால் நல்லது.
⭐கிஸ்மிஸ் பழம்
மிகவும் சத்தான ஸ்நாக்ஸ் இது. ஓய்வு நேரங்களில் நொறுக்குத் தீனிகளை எடுப்பதை விட மிகவும் கிஸ்மிஸ் பழம் உட்பட நட்ஸ் வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் பொட்டாசியம் கண்டண்ட் இருப்பதுடன் சர்க்கரைச் சத்தும் இருப்பதால் ரத்த அழுத்தம் குறைவாவதை தடுக்க முடியும்.
⭐டார்க் சாக்லெட்
ஸ்ட்ரஸ் குறைத்திடும் டார்க் சாக்லேட் வகையினை சாப்பிடலாம். எப்போதும் கையில் சாக்லெட் வைத்திருங்கள். லோ பிரசர் ஆகும் அறிகுறி தெரிந்தால் உடனேயே சாக்லேட் சாப்பிடுங்கள். ஆனால் தொடர்ந்து தினமும் சாப்பிட வேண்டாம்.
⭐பீட்ரூட்
பீட்ரூட்டில் இரும்புச்சத்து, ஃபோலேட், வைட்டமின் 12 போன்ற இரத்தணுக்களின் உற்பத்திற்கு வேண்டிய சத்துக்கள் வளமாக உள்ளது.
ஆகவே உடலில் இரத்தணுக்களின் அளவு சீராக இருக்க நினைத்தால், பீட்ரூட் ஜூஸை அடிக்கடி குடித்து வாருங்கள்.
முக்கியமாக இரத்த சோகை உள்ளவர்கள், இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடலில் இரத்தத்தின் அளவு வேகமாக அதிகரிக்கும்.
💚 low பிரஷர் குணமாக……
💊 low பிரஷர் சூரணம் 💊
1.லேசாக வறுத்த சீரகம் 100கி,
2.லேசாக வறுத்த ஏல அரிசி 50கி,
3.பச்சை கற்பூரம் 25கி இதை நன்கு கல்வத்தில் அரைத்து பின் மேற்கண்ட பொருள்களையும் சேர்த்து நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொண்டு,
4.சுக்கு 10கி
5.மிளகு 10கி
6.திப்பிலி 10கி
7.கொத்தமல்லி 20கி
8. அமுக்கிரா 20கி
4 முதல் 8 வரை உள்ளவற்றை நன்கு சூரணித்து பின் மேலுள்ள 1 முதல் 3 வரையுள்ள கலவையையும் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக்கி வைத்துக்கொண்டு காலை இரவு 1 கிராம் அளவு உணவுக்குப் பின்பு……
low பிரஷர் நாட்டுக்கோழி சூப் அல்து மிளகு ரசத்திலும் அருந்தவும்.
👉ஒரு கிளாஸ் வெந்நீரில், அரை துண்டு எலுமிச்சை பழத்தை பிழிந்து, அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு கல் உப்பு சேர்த்து நன்றாக கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, இந்த குறைந்த இரத்த அழுத்தம் பிரச்சனை சரியாகிவிடும்.
👉10 பாதாம் பருப்புகளை தோல் நீக்கி, நன்கு பேஸ்ட்டு போல் அரைத்து கொள்ளுங்கள், பின் அவற்றை பாலுடன் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, அருந்திவர குறைந்த இரத்த அழுத்தம் பிரச்சனை சரியாகிவிடும்.
👉குறைந்த ரத்த அழுத்தம் நோய் குணமாக தினமும் சாப்பிடும் உணவில் 10 மில்லி ரோஸ்மேரி எண்ணெயை சேர்த்து கொள்ளுங்கள்.
இவ்வாறு ரோஸ்மேரி எண்ணெயை உணவில் சேர்த்து கொள்வதினால் குறைந்த இரத்த அழுத்தம் நோய் சீராகும்.
இவ்வாறு ரோஸ்மேரி எண்ணெயை உணவில் சேர்த்து கொள்வதினால் குறைந்த இரத்த அழுத்தம் நோய் சீராகும்.
👉இரண்டு கேரட்டினை சிறு, சிறு துண்டுகளாக கட் செய்து, மிக்சியில் ஜூஸ் போல் அடித்து எடுத்து கொள்ளுங்கள் அதனுடன் தேவையான அளவு தேன் கலந்து தினமும் அருந்திவர குறைந்த இரத்த அழுத்தம் சரியாகிவிடும்.
👉ஒரு இஞ்சியை நன்றாக தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின் அவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு நாள் முழுவது நன்றாக சூரிய வெளிச்சத்தில் காயவைக்கவும்.
பின் மறுநாள் அவற்றை ஒரு பாட்டிலில் மாற்றி அந்த இஞ்சி துண்டுகள் நன்றாக முழுகும் அளவிற்கு தேனில் ஒரு நாள் முழுவதும் ஊறவைக்க வேண்டும்.
பின் இந்த இஞ்சி துண்டுகளை தினமும் சாப்பிட பிறகு ஒரு துண்டு எடுத்து சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு சாப்பிடுவதினால் இரத்த அழுத்தம் பிரச்சனை குணமாகும்
LACbet: Online Casino | Play With $10 Free on Us
பதிலளிநீக்குLACbet 우리카지노 is a top online gambling platform available in the U.S. and betway is regulated by the MGA. 카지노사이트 Learn more about the games available at LACbet.com.
Casinos Near Maha Maruti - KTM Hub
பதிலளிநீக்குLocated on the banks of 의왕 출장샵 the Besar river, there are a lot of beautiful and clean facilities 상주 출장샵 and 안산 출장샵 many 천안 출장샵 of them come 거제 출장마사지 with attractive and helpful
hj806 giroonlineshop,raquetas badminton yonex mexico,vêtements mlb,kickers shoes,new era cap 59fifty,xn--yonexmagyarorszg-tmb,yonex österreich,ropa mlb peru,new era caps suomi hs624
பதிலளிநீக்கு