6 ஜனவரி, 2015

வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடிப்பதின் பயன்கள்

காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதாவது 5 முதல் 6 டம்ளர்கள்வரைத் தண்ணீரைக் குடிக்கவும். அதற்குப் பின் முகத்தைக் கழுவ வேண்டும். இதற்குப் பெயர் தான் வாட்டர் தெரபி என்று பெயர்.

இந்த வாட்டர் தெரிபியன் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பும், குடித்த 1 மணி நேரத்திற்கு பின்பும் எதுவும் சாப்பிடக் கூடாது. மேலும் இந்த வாட்டர் தெரிபியை கடைபிடிப்பவர்கள், 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு முந்தைய இரவில் மது அருந்தக்கூடாது. தேவைப்பட்டால் வாட்டர் தெரபிக்கு சூடேற்றிய தண்ணீரையோ அல்லது வடிகட்டிய தண்ணீரையோ பயன்படுத்தலாம்.

வாட்டர் தெரபியை புதிதாக ஆரம்பிக்கும் போது முதலில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கும் மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால் போகப் போக பழகிவிடும்.

தொடக்கத்தில் வாட்டர் தெரபியைத் தொடங்கும் போது முதலில் 4 டம்ளர்கள் தண்ணீரைக் குடித்துவிட்டு, பின் 2 நிமிடங்கள் கழித்து மீதமுள்ள 2 டம்ளர் தண்ணீரை குடிக்கலாம். வாட்டர் தெரபியைத் தொடங்கும் புதிதில், தண்ணீரைக் குடித்த 1 மணி நேரத்தில் 2 முதல் 3 முறை சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். ஆனால் போகப் போக இதுவும் சரியாகிவிடும்.

வாட்டர் தெரபியின் நன்மைகள்:

1. மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.
2. நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
3. வாட்டர் தெரப்பி, உடலில் உள்ள நச்சுத் தன்மையை சிறுநீர் மற்றும் இனிப்பு ஆகியவற்றின் மூலம் வெளியேற்ற உதவுகிறது.
4. உடல் ஆரோக்கியத்தையும், தோலில் மினு மினுப்பையும் வழங்குகிறது.
5. உடல் சூட்டைத் தணிக்கிறது.
6. உடலில் இருக்கும் தேவையில்லாத பொருள்களை எளிதாக வெளியேற்ற வாட்டர் தெரபி உதவுகிறது.
7. வாட்டர் தெரபியை முறையாக கடைபிடித்து வந்தால்,
அது 1 நாளில் மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தும்,
2 நாட்களில் அசிடிட்டியைக் கட்டுப்படுத்தும்,
7 நாள்களில் நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும்,
4 வாரங்களில் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும்,
3 மாதங்களில் டிபியைக் கட்டுப்படுத்தும்,
10 நாட்களில் காஸ்ட்ரிக்கைக் கட்டுப்படுத்தும்,
மேலும் 4 வாரங்களில் உயர் இரத்த அழுத்தும் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும்.

மேலும் தலைவலி, உடல்வலி, வேகமான இதய துடிப்பு, உடல் குண்டாதல், ஆஸ்துமா, டிபி, சிறுநீரகபிரச்சனைகள், சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள், மூட்டுவலி, வயிற்று போக்கு, வாந்தி, வயிற்றுப்போக்கு, மூலம், நீரழிவு நோய்கள், கண் சம்பந்தப்பட்ட நோய்கள், பெண்கள் சந்திக்கும் மாதவிடாய் சுழற்யில் ஏற்படும் பிரச்சினைகள், காது, மூக்கு மற்றும் தொண்ட சம்பந்தப்பட்ட நோய்கள் போன்ற நோய்களை இந்த வாட்டர் தெரபி குணப்படுத்துகிறது....

31 டிசம்பர், 2014

நிலக்கடலை...

நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.

நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.

நீரழிவு நோயை தடுக்கும்:

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பித்தப் பை கல்லைக் கரைக்கும்:

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதயம் காக்கும்:

நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

இளமையை பராமரிக்கும்

இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்கும்:

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

மன அழுத்தம் போக்கும்:

நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.

கொழுப்பை குறைக்கும்:

தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.

இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.

கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.

கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:

பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

நிறைந்துள்ள சத்துக்கள்:

100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.

கார்போஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும் கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.

போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.

பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:

நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு

29 டிசம்பர், 2014

செவ்வாழை...!!!

      செவ்வாழை...!!! 

திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும்.

குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
எளிமையுடன் எண்ணற்ற சத்துக்களும் கொண்டது

வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்பு சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.

மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.

பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.


    திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும்.
    குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளு...க்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
    எளிமையுடன் எண்ணற்ற சத்துக்களும் கொண்டது

    வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்பு சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.
    செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.
    கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
    மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.
    பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

24 டிசம்பர், 2014

நேரத்திற்குச் சாப்பிட்டால்தான் அல்சர் வரும்

நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால் அல்சர் வரும் என்று உங்களுக்கு இத்தனை நாளும் போதிக்கப்பட்டுள்ளது. அல்சர் பெரும்பாலும் நேரா நேரத்திற்குக் கடிகாரத்தைப் பார்த்துச் சாப்பிடுபவர்களுக்கே வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் தயிர் சாதமோ அல்லது சாம்பார் சாதமோ எடுத்து வைத்து ஒரு பத்து பதினைந்து நாட்கள் கழித்துப் பாருங்கள். இப்போது அந்தச் சாதம் கெட்டுப்போய் நாற்றம் எடுக்கும். சில சமயம் புழுக்கள் கூட வந்திருக்கலாம். மீண்டும் அந்தப் பாத்திரதை மூடி அப்படியே வைத்து விடுங்கள். மறுபடியும் ஒரு பத்து பதினைந்து நாட்கள் கழித்துப் பாருங்கள். அந்தக் கெட்டுப்போன சாதம் விஷமாக மாறி, அந்தப் பாத்திரத்தைப் பாதித்து ஓட்டை போட்டிருப்பதைப் பார்த்திருக்கலாம் (இதை வீட்டிலேயே சோதித்துப் பாருங்கள்).

இப்போது அல்சர் எப்படி வந்தது என்று உங்களால் சுலபமாகப் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் நினைப்பது போல் நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால் அல்சர் வரும் என்பதெல்லாம் பொய். பசிக்காமல் நேரத்திற்குச் சாப்பிடும்போதுதான் அல்சரே வருகிறது.

பசித்துச் சாப்பிடும் போதுதான் வயிற்றில் ஜீரண நீர்கள் சுரக்கின்றன. வயிற்றில் நேரத்திற்கு அலாரம் வைத்து கொண்டு ஜீரண நீர்கள் சுரப்பதில்லை. அந்தந்த ரேத்திற்கு வருவதற்கு இது ஒன்றும் பேருந்தோ, ரயிலோ அல்ல. என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா, நேராநேரத்திற்குச் சுரப்பதற்கு அங்கு எந்த விதமான ஏற்பாடும் கிடையாது. மனித உடலானது முற்றிலும் உணர்வுகளால் ஆனது.

உணர்வுகளே மனித உடலை வேலை செய்யத் தூண்டுகின்றன, வேலையை முடிக்கவும் தூண்டுகின்றன. செயல்படுத்தவும் வைக்கின்றன. நேரத்திற்கு ஜீரண நீர் சுரந்து விடும். அப்போது வயிற்றில் சாப்பாடு இல்லையென்னறால் அல்சர் புண் வந்துவிடும் என்பது போன்ற காமெடி வேறு எதுவும் இல்லை.

நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால் அல்சர் வருகிறதென்றால், இந்தியாவில் பெரும்பாலான ஏழை மக்களுக்கும் பிச்சைக்காரர்களுக்கும் அல்சர் வந்திருக்க வேண்டுமே! பெரும்பாலும் அல்சர் வருவது மூன்று வேளையும் நன்கு சாப்பிடுபவர்களுக்கே என்பதைக் கவனியுங்கள்.

நீங்கள் பசிக்காமல் மூன்று வேலையும் சாப்பிடும் போது, ஜீரண நீர்கள் சுரக்காத நிலையில் வயிற்றில் இருக்கும் உணவு அங்கேயே தங்கி, புளித்து, கெட்டு, கெட்டவாயுக்கள் உருவாகத் துணை புரிகிறது. தினம்தோறும் இதுபோன்ற செயல் தொடர்ந்து நடைபெறும்போது, கெட்டுப் போன உணவு விஷமாக மாறுகிறது. பாத்திரத்தில் வைத்த உணவு எப்படி விஷமாக மாறுகிறதோ.... அப்படி விஷமாக மாறிய உணவு, உங்கள் வயிற்றில் அல்சரை (புண்களை) உருவாக்குகிறது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

ஜீரணம் கெட்டால்தான் அல்சர் வருமே ஒழிய, ஜீரணிப்பதற்கு அங்கு ஒன்றுமே இல்லாத போது அல்சர் வராது. சாப்பிடாமல் இருந்தால் உடல் சோர்வடைந்து, சத்துக் குறைபாடு ஏற்பட்டு, அது சம்பந்தமாக நோய்கள் வேண்டுமானால் வரலாம்.

அல்சர் வயிற்றில் மட்டுமல்லாமல், உடலின் எந்தப் பாகத்தில் வேண்டுமானாலும் தோன்றலாம். நாட்பட்டு வெளியேற முடியாமல் தேங்கும் கழிவுகள் அந்த இடத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பாதிக்கப்பட்ட அந்த இடத்தில் புண்கள் உருவாகின்றன. அதையே அல்சர் என்கிறோம். அல்சர் என்ற புண்கள் குணமாக வேண்டுமானால், தேங்கியுள்ள் கழிவுகளை முதலில் வெளியேற்ற வேண்டும். கழிவுகள் வெளியேறாவிட்டால் மீண்டும் மீண்டும் அல்சர் வந்துகொண்டே தான் இருக்கும்.

அல்சர் வந்து விட்டால் உங்கள் உடலில் கழிவுகளின் தேக்கம் நிறைய உள்ளது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

வியர்வை நாற்றத்தை ஒரே நாளில் நீக்கலாம்...!

வியர்வை நாற்றத்தை ஒரே நாளில் நீக்கலாம்...!

பொதுவாக வியர்வை நாற்றம் என்பது எல்லோருக்கும் இருக்கக்கூடிய பொதுவான ஒன்றாகும். ஆனால் சிலருக்கு வியர்வை நாற்றம் என்பது பக்கத்தில் இருப்பவரை கூட அருகில் செல்ல முடியாமல் செய்துவிடும். சிலர் சோப்பு, வாசனை திரவியம் போன்ற பொருட்களை உடலெங்கும் பூசி இருப்பதும் நமக்கு தெரிந்த ஒன்று தான், வியர்வை துர்நாற்றம் அடிக்கிறது என்கிறது மருந்து கேட்டால் வியர்வை வராமல் செய்துவிடும் ஆபத்தான மருந்துகளும் கிடைக்கிறது, சரி சித்த மருத்துவரிடம் சென்று மருந்து கேட்டால் அவர் 5 வகையான கூட்டு சரக்கு மருந்து இதை அரைத்து தினமும் பூச வேண்டும் என்று சொல்கின்றனர், இவற்றை எல்லாம் தாண்டி ஒரு அதிசயம் கடந்த மாதம் நண்பர் ஒருவர் மூலம் இயற்கை உணர்த்தியது.

மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் நபர் ஒருவர் வியர்வை நாற்றம் தனக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது, வாசனைத்திரவியங்களை தாண்டியும் கூட சில நேரங்களில் தன் உடலில் இருந்து நாற்றம் அடிக்கிறது என்று பலமுறை நம்மிடம் தெரிவித்து இருந்தார், எல்லோருக்கும் இருக்கும் சாதாரண விசயம் தானே என்று அலட்சியமாக இருந்தோம் ஒருநாள் மிகுந்த மனவருத்தத்தோடு வந்தார். தன் நண்பர்கள் கூட இப்போது அருகில் வந்து பேசுவதில்லை என்றார். இப்போது தான் இதன் முக்கியத்துவம் நமக்கு தெரிந்தது. எல்லாம் வல்ல எம் குருநாதரை வணங்கி அகத்தியர் குணபாடத்தை வேறு ஒரு நோய்க்காக அதில் இருக்கும் பாடலை படித்து கொண்டிருந்தோம் மனம் மட்டும் வியர்வை நாற்றத்திற்கான மருந்தை தேடியே இருந்தது, வேறு நோய்க்கான மருந்தின் பாடலின் கடைசி வரியில் துர்நாற்றமும் போக்குமடா இந்த கனி என்று இருந்தது. மனதில் சந்தோசம் கண்களில் மட்டும் கண்ணீர் இரண்டு நிமிடம் வந்தது குருநாதரின் அன்பை என்ன சொல்வேன். குருநாதருக்கு மனதார நன்றி கூறினோம்.

வியர்வை நாற்றத்தை நீக்கும் அந்த கனி ” எலுமிச்சை “ தான், எத்தனை நாட்களில் வியர்வை நாற்றம் நீங்கும் என்று கேட்கிறீர்களா சரியாக மூன்று மணி நேரம் தான். அடுத்த நாள் அதிகாலை நண்பரிடம் சென்று எலுமிச்சை வாங்கி கொடுத்து அதில் அரை பழத்தை மட்டும் வெட்டி உடல் எங்கும் நன்றாக தேய்த்து 1 மணி நேரம் கழித்து குளித்துவிட்டு வர சொன்னோம் கூடவே ஒரு கண்டிசன் குளிக்கும் போது சோப்பு கூட போடக்கூடாது , குளித்த பின் வாசனைத்திரவியங்கள் , பவுடர் பூசக்கூடாது என்றோம். நம்மை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தார், குளித்த பின் காலை 8.30 மணிக்கு உங்கள் வீட்டுக்கு வருகிறேன், அரை மணி நேரம் என்னுடன் தான் இருக்க அருகில் இருக்க வேண்டும் என்றார் , தாராளமாக வாங்க என்று சொல்லிவிட்டு நகர்ந்தோம், சரியாக 8.30 மணிக்கு வந்தார் நாம் அருகில் உட்கார்ந்தோம், எப்படி இருக்கிறது மருந்து வேலை செய்கிறதா என்று கேட்டோம். இப்போது நன்றாக இருக்கிறது எந்த நாற்றமும் இல்லை ஆனால் சாயங்காலம் வரை பார்த்தபின் தான் மருந்து எப்படி வேலை செய்கிறது என்று சொல்வேன் என்றார், சாயங்காலம் 6 மணிக்கு வந்தார் அவர் அருகில் தான் நாம் உட்கார்ந்திருந்தோம் எந்த நாற்றமும் இல்லை, வியர்வை எப்போதும் போல் தான் வருகிறது ஆனால் வியர்வை நாற்றம் என்பது துளிகூட இல்லை என்று சொல்லி மனதார நன்றி கூறினார்.

தினமும் அரை எலுமிச்சை பழம் தேய்த்து குளிக்கலாம் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அரை எலுமிச்சை பயன்படுத்தலாம். முடிந்தவரை அசைவ உணவு வகைகளையும், மைதாவில் தயாராகும் உணவுப்பண்டங்களையும் குறைக்கப்பாருங்கள் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொண்டாலே வியர்வை நாற்றம் பெருமளவு குறையும். நீங்களும் பயன்படுத்தி தங்கள் பதிலை மறக்காமல் தெரிவியுங்கள்.

தூக்கம் ஏன் வருவதில்லை…?

தூக்கம் ஏன் வருவதில்லை…?

இன்றைய அவசர உலகில் பெரும்பாலானவர்கள் தூக்கமில்லாமல் தவிக்கிறார்கள் என்று கூறுகிறது ஒரு சர்வே! முன்பெல்லாம் உடல் உழைப்புதான் பிரதானமாக இருக்கும். அதனால் படுத்தவுடனேயே தூக்கம் கண்களை தழுவி விடும்!

ஆனால் இன்றைக்கு பெரும்பாலான வேலைகளில் உடல் உழைப்பை குறைத்து… அறிவு சார்ந்த பணிகள்தான் அதிகம். அதனால் தூக்கமின்மையும் பெருகி வருவது சகஜம்தான். என்றாலும் உறக்கத்திற்கான வழிமுறையை நாம் பின்பற்றினால் தூக்கம் என்பது துக்கமாக இருக்காது!

அதற்கான 15 டிப்ஸ்கள் இதோ…

* குறிப்பிட்ட நேரத்தில் படுக்கவும். தாமதமாக படுப்பதால் உருண்டு, புரண்டு கொண்டிருப்போமே தவிர, தூக்கம் வருவது சிரமமாக இருக்கும்.

* உறக்கம் வரவில்லை என்று தெரியும்போது, படுக்கையில் நேரத்தை செலவிட வேண்டாம். தூக்கம் வரும் அந்த நிமிடத்தில் படுத்தால் போதும்.

* படுக்கை அறை என்பது தூங்குவதற்கு மட்டுமே… திருமணம் ஆகியிருந்தால், மனைவி, கணவர் இருவருக்குமான வாழ்க்கையை ரசிக்குமிடம். ஆதலால் படுக்கையறைக்குள் இந்த இரண்டை மட்டுமே சிந்திக்க வேண்டும். வேறு எந்த நினைப்பையும் சுமந்து கொண்டு படுக்கையறைக்குள் நுழைய வேண்டாம்.

* ஒரே படுக்கையில் தொடர்ந்து படுக்கவும். படுக்கையை மாற்றினாலும் தூக்கம் வராமல் தொந்தரவாக மாறிவிடும்.

* தூக்கம் வரவில்லை என்றவுடன் படுக்கையறையை விட்டு வெளியேறுங்கள். ஏதாவது போரடிக்கும் புத்தகத்தை படிக்கலாம். அல்லது ஒரு வேலையை செய்து கொண்டிருந்தால் சிறிது நேரத்தில் தூக்கம் வந்து விடும்.

* தூங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் லேசான சுடுநீரில் குளித்தால் உறக்கம் நன்றாக வரும்.

* தூங்கும்போது தளர்வான… அதாவது லூசான உடைகளை அணியவும். குறிப்பாக காட்டன் உடைகள் நல்லது. ப்ரஷ்ஷான உடைகளை… அணிந்து… படுத்தால் மகிழ்ச்சியான தூக்கம் வரும்.

* படுக்கையறையில் வெளிச்சம், சத்தம், வெப்பம், குளிர் என்று தொந்தரவு தரும் விஷயங்கள் இருக்க வேண்டாம். குறிப்பாக `கடகட’ வென்று சுத்தும் மின்விசிறியின் சத்தம் உங்களுடைய தூக்கத்திற்கு தடையை ஏற்படுத்தும்.

* நிம்மதியான தூக்கத்திற்கு படுக்கையின் அமைப்பும் அவசியம். முதுகுக்கு நல்ல சப்போர்ட்டாக இருக் கும் பெட் அமைப்பு இருந்தால் நல்லது. படுக்கை மீது அழகான விரிப்புகளும், அழகான தலையணை உறைகளும் உங்களுடைய தூக்கத்தை சந்தோஷமாக மாற்றும்.

சுருக்கத்துடன், அழுக்காக படுக்கை விரிப்பு மற்றும் தலையணை உறைகள் இருந்தால் தூக்கம் வருவதற்கு தடை ஏற்படும். அதேபோல், கம்பளி போன்றவற்றால் போர்த்தி படுத்தாலும் எரிச்சலை உருவாக்கும். அதற்கு முன்னதாக நைலான் துணியை போர்த்தி அதன்மேல் கம்பளி போர்வையை போர்த்தலாம்.

* தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட்டு விடவும். தூங்குவதற்கு முன் ஒரு கப் பால் சாப்பிடலாம். பாலில் உள்ள குறிப்பிட்ட சத்து மூளையிலிருந்து நமக்கு தூக்கத்தை வரவழைக்கும்.

* காபி, டீ, குளிர்பானம் மற்றும் சாக்லேட் உணவுகளை இரவில் சாப்பிடக்கூடாது. இதில் உள்ள காபின், நமது உடலில் 5 மணி நேரத்திற்கு இயங்கும். சிலருடைய உடல்வாகுக்கு 12 மணி நேரம் கூட செயல்படும். இந்த காபின் தூக்கத்தை கெடுக்கும் தன்மை உடையது.

* மது குடித்தால் தூக்கம் வரும் என்பது தவறான கருத்து. மது, புகை தூக்கத்தை கெடுக்கும் வஸ்துகள். மது அருந்தி தூங்கினால் இடையில் முழிப்பு வரும். அதே போல் புகை பிடிப்பதால் அதிலுள்ள நிகோடின் தூக்கத்தை கெடுத்து, தலைவலியை உண்டாக்கும்.

* தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால் தூக்கம் ஈஸியாக வரும். தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு வரை உடற்பயிற்சி செய்யலாம். தினமும் காலையில் உடற்பயிற்சி என்பது தூக்கத்திற்கான தடையை நீக்கி விடும்.

* உடலில் எந்த நோய் தாக்கினாலும் அதனால் பாதிப்பு ஏற்படுவது தூக்கத்திற்குதான். சிகிச்சைக்காக டாக்டரிடம் செல்லும்போது தூக்கத்தின் தன்மையைப் பற்றி கூறுவது நல்லது. சில வகையான மருந்து, மாத்திரைகளை சாப்பிடுவதால் அடிக்கடி சிறுநீர் வெளியேறும். இதனாலும் இரவில் தூக்கம் கெடும்.

* வாழ்க்கையில் சிக்கல், வேலை நெருக்கடி, மன இறுக்கம், மனக் குழப்பம் ஆகியவற்றை நினைத்து பயப்பட்டால் இரவில் தூக்கம் என்பது சிரமம்தான்.

இரவில் படுக்கப் போகும்போது, இந்த மாதிரி விஷயங்களை `காலையில் பார்த்துக் கொள்ளலாம்’ என்று நிம்மதியாக தூங்கப் பழகுங்கள். தூங்கும்போது வேறு எந்த நினைப்பும் வேண்டாம்.

மிச்சமி துக்கடம்: மன்னிப்பின் மகத்துவம் மற்றும் அதன் உண்மையான அர்த்தம்!

மிச்சமி துக்கடம்: மன்னிப்பின் மகத்துவம் மற்றும் அதன் உண்மையான அர்த்தம்! ஜெயின மதத்தின் மிக முக்கியமான திருவிழாவான பரியுஷனா (Paryushana) முட...