ஞாயிறு, 21 டிசம்பர், 2014

குளிர்காலத்தில் உடம்பு வலிக்கிறதா..? (எளிய நிவாரணம்)

Baskar Jayaraman-ன் படம்.

Baskar Jayaraman-ன் படம்.
நட்புறவுகளே... உங்களுக்கு அல்லது உங்களில் யாருக்காவது இந்தக் குளிர்காலம் வந்தால்...
உடம்பு வலிக்கிறதா...?
முதுகு தண்டில் வலிக்கிறதா?
கழுத்தெலும்பு வலிக்கிறதா..?
இடுப்பெலும்பு குடைகிறதா..?
வயிறு உப்பலாக இருக்கிறதா?
சோம்பலாக இருக்கிறதா?
சாப்பிடப் பிடிக்காமல் ஏதோ சாப்பிட வேண்டுமே என்று சாப்பிடுகிறீர்களா...?
நிறைய வேலையிருந்தும் எந்த வேலையையும் செய்ய பிடிக்கவில்லையா..?
கவலையை விடுங்கள்.
இதையெல்லாம் இரண்டே நாட்களில் போக்க ஓர் எளிய வழியைச் சொல்கிறேன். மிகவும் சாதாரண வழி. என் பாட்டி சொன்ன வழி.
டாக்டருக்கு பணம் அழுவ வேண்டாம். மருந்து வாங்கி கடினப்பட்டு அதை விழுங்க வேண்டாம்.
நான் சொன்ன பிறகு ப்பு இவ்வளவு தானா என்பீர்கள். ஆனால் சிறந்த வழி.
நான் சொல்வதைப் போல் பக்குவம் செய்து சாப்பிடுங்கள். இந்த வலியெல்லாம் ஓடியே போய்விடும்.
இரண்டு டம்ளர் நீரில்
ஒரு ஸ்பூன் மிளகுத்தூள்
ஒரு ஸ்பூன் நெல்சீரகத் தூள்
கொஞ்சம் மஞ்சள் தூள்
அரை ஸ்பூன் பெருங்காயத் தூள்
ஒரு தக்காளி
நான்கு பல் நசுக்கிய பூண்டு விழுது
கொஞ்சம் புளி அல்லது எலுமிச்சை சாறு.
கொத்த மல்லித் தழை கைப்பிடி அளவு
விருப்பத்திற்கேற்ற உப்பு
இந்த எல்லா பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் இட்டு நன்றாக கையால் பிசைந்து வையுங்கள். இன்னொறு பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிகக் கொஞ்சமாக ஊற்றிய எண்ணையில் கடுகு உளுத்தம்பயிரு ஒரு காய்ந்த மிளகாய் போட்டு வெடித்ததும் கரைத்து வைத்ததை அதில் ஊற்றி ஒரு கொதி வந்ததும் நிறுத்தி ஆறவிடுங்கள்.
பின்பு அதை ஒரு டம்ளரில் வடிகட்டி அப்படியே குடிக்கலாம். அல்லது சோற்றில் கலந்தும் சாப்பிடலாம்.
இது போல் இரண்டு நாட்கள் சாப்பிட்டாலே உடம்பில் இருக்கும் வலியெல்லாம் ஓடிவிடும்.
ஓ... ரசம்...!!
இதுதானா... என்று எல்லோரும் என்னை முறைப்பது எனக்கு இங்கிருந்தே தெரிகிறது. என்ன செய்வது... கோபப் படாதீர்கள்.
இந்த குளிர்காலம் வந்தாலே உடலில் சேர்ந்துள்ள வாயு எல்லாம் மூட்டுக்கு மூட்டு தங்கி இப்படி உபத்திரவம் கொடுக்கும் தான். அதைப் போக்க எளிய வழி நாம் அடிக்கடி உணவில் சேர்க்கும் இந்த எளிய ரசம் தான். நம் உணவே நமக்கு மருந்து என்பதை இளைய தலைமுறை அறிவதில்லை.
அவர்களுக்காகத் தான் இந்தப் பதிவு. அதனால் குளிர் காலத்தில் உணவில் அடிக்கடி ரசம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அருணா செல்வம் @http://tamilnanbargal.com/

மூலத்தை ஓட ஓட விரட்டும் துவரை..!

Muthukumar Ambasamudram-ன் படம்.

Muthukumar Ambasamudram-ன் படம்.

மூலத்தை துரத்தும் துவரை வேர் நாம் உண்ணும் உணவு உணவுப்பாதையில் சீரணிக்கப்பட்டு திடக்கழிவாக மலவாசலில் வெளியேறாவிட்டால் பல உபாதைகள் தோன்ற ஆரம்பித்துவிடும். இதற்காக மிகவும் பிரயத்தனம் செய்து மலம் கழிக்க முயற்சிக்கும்போது மலவாயிலில் வலி மற்றும் புண்கள் தோன்றலாம். இதே நிலை நீடிக்கும்பொழுது மலப்பாதையில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு மலம் கழிக்க சிரமம் உண்டாவதுடன் ஆசனவாயின் வெளிப்புறம் அல்லது உட்புறத்தில் சிறுசிறு கட்டிகளோ அல்லது வீக்கமோ தோன்றி மூலநோயாக மாறிவிடுகிறது.
குறைந்தளவே தண்ணீர் அருந்துபவர்கள், அதிக உடல் உஷ்ணம் உள்ளவர்கள், நீண்ட நேரம் அமர்ந்தே வேலை செய்பவர்கள், வாயுவை பெருக்கக்கூடிய பதார்த்தங்களை அதிகம் உட்கொள்பவர்கள், கடுமையான மலச்சிக்கல் உள்ளவர்கள் மற்றும் உடல் பருமன் உள்ளவர்கள் மூலநோய்க்கு ஆட்படுகிறார்கள். பரம்பரையாகவும் மூலநோய் ஏற்படுகிறது. இவர்களுக்கு ஆசனவாய் பகுதியில் கிருமிகள் தங்கி வளருவதால் ஆசனவாயில் அரிப்பு உண்டாகி, சில நேரங்களில் மூலம் முற்றிப்போய் ரத்தமும், சீழும் மலத்துடன் கலந்து வெளியேற ஆரம்பிக்கிறது. பலருக்கு இதன் ஆரம்ப அறிகுறி தெரியாமல், நோய் அதிகரித்த பின்பே பலவித உபாதைகள் தோன்றுகின்றன. மூலநோய் உள்ளவர்கள் வாயுவை பெருக்கக்கூடிய கிழங்கு வகைகள், பயறு வகைகள், கொழுப்பு சத்துள்ள உணவுகள், அசைவம், காரம், பூண்டு ஆகியவற்றை தவிர்ப்பதுடன், நீண்ட நேரம் அமர்ந்திருப்பதையும், அதிக எடை தூக்குவதையும், வாகன பிரயாணம் செய்வதையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.
எளிதில் செரிக்கக்கூடிய நார்ச்சத்துள்ள உணவுகள், பச்சை காய்கறிகள், கீரைகள், பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். சாதாரண மூலம்தானே என்று அலட்சியம் காட்டினால் அது பவுத்திரமாகவும், ஆசனவாய் அடித்தள்ளலாகவும் மாறிவிடுகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் துவரையின் வேரில் ஏராளமான மருத்துவகுணங்கள் அடங்கியுள்ளன. கஜானஸ் கஜன் என்ற தாவரவியல் பெயர் கொண்ட பேபேசியே குடும்பத்தைச் சார்ந்த துவரைப் பயிர்கள் உணவுப்பயிராக சாகுபடி செய்யப்படுகின்றன. சாணபுஷ்பிகம் என்ற சமஸ்கிருத பெயர் கொண்ட துவரையின் வேரில் பெனில் அலனின், ஐசோபுளோவின், ஐசோபுளோவோன், ஸ்டீரால், ஆன்த்ரோகுயினோன், டிரைடெர்பினாய்டு மற்றும் கஜானால் போன்ற வேதிப்பொருட்கள் அடங்கியுள்ளன. இவை மெல்லிய சதைப்பகுதிகளில் ஏற்படும் வீக்கம், கொப்பளம், கட்டி போன்றவற்றை கரைத்து அங்கு தேங்கிய ரத்த ஓட்டத்தை சீராக்குகின்றன.
துவரை வேரை நிழலில் உலர்த்தி முடிந்தளவு பட்டையை உரித்து, நன்கு பொடித்து, சலித்து 1 முதல் 2 கிராம் அளவு தினமும் இரண்டு வேளை தேன் அல்லது வெண்ணெயுடன் கலந்து சாப்பிட, ஆசனவாய் பகுதியில் தோன்றிய வீக்கம் மற்றும் சதை வளர்ச்சி நீங்கும். துவரம் பருப்பிலும் இந்த வேதிச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் அன்றாட உணவில் நன்கு வேகவைத்து உட்கொண்டு வந்தால் மலவாய் பகுதியில் தோன்றிய வீக்கம் நீங்கும்.துவரை வேரிலிருந்து மருந்து செய்ய இயலாதவர்கள் துவரை வேர் சேர்த்து செய்யப்பட்ட கன்கனியாதிவடி என்னும் ஆயுர்வேத மாத்திரையை காலை-1, இரவு-1 உணவுக்குப் பின்பு சாப்பிட்டுவரலாம். அத்துடன் விளக்கெண்ணெயை கஸ்தூரி மஞ்சளுடன் சேர்த்து ஆசனவாயில் தடவலாம்.

சனி, 13 டிசம்பர், 2014

உடல் எடையைக் குறைக்க உதவும் இந்திய உணவுகள்!!!

நீங்கள் உடல் எடையால் அதிகம் அவஸ்தைப்படுகிறீர்களா? இதற்காக நிறைய முயற்சிகளை எடுத்துள்ளீர்களா? இருப்பினும் எவ்வித பலனும் கிடைத்ததில்லையா? கவலையை விடுங்கள். ஏனெனில் எப்போதுமே ஒன்றைப் பெற நினைக்கும் போது கடுமையாக செயல்படுவதை விட, ஸ்மார்ட்டாக செயல்பட்டால், நிச்சயம் அதனை விரைவில் பெற முடியும்.

கொழுப்பை விரைவில் குறைக்க உதவும் 10 நிமிட உடற்பயிற்சிகள்!!!எனவே உடல் எடையைக் குறைக்க கடுமையாக முயற்சிக்காமல், சிம்பிளான வழிகளைத் தேடுங்கள். உங்களால் தினமும் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்ய முடியவில்லையா? பரவாயில்லை. மாறாக, கடைகளில் விற்கப்படும் உணவுகளை வாங்கி சாப்பிடுவதைத் தவிர்த்து, உடல் எடையைக் குறைக்க உதவும் அதே சமயம் விலைக் குறைவிலும் கிடைக்கும் உணவுப் பொருட்களை அன்றாட உணவில் சேர்த்து வாருங்கள்.
7 நாட்களில் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரிய இத ஃபாலோ பண்ணுங்க...அதற்கு அந்த உணவுகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
சிறுதானியங்கள்: சிறுதானியங்களான கம்பு, கேழ்வரகு போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இத்தகைய தானியங்களை நம் முன்னோர்கள் அதிகம் எடுத்து வந்ததால் தான், அவர்கள் உடல் பருமன் பிரச்சனையால் அவஸ்தைப்படாமல் இருந்தார்கள். எனவே இவற்றை முடிந்தால் அன்றாட உணவில் சேர்த்து உடல் எடையை குறையுங்கள்.
பாசிப்பருப்பு: பாசிப்பருப்பில் கலோரி குறைவாக இருப்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்போர், தினமும் உணவில் இதனை சேர்த்து வருவது நல்லது. மேலும் இதனால் உடலுக்கு வேண்டிய வைட்டமின்களான ஏ, ஈ மற்றும் சி அதிகம் கிடைக்கும்
மஞ்சள்: மஞ்சள் அனைத்து வீடுகளிலும் இருக்கும் ஒரு பொருள் தான் மஞ்சள். இந்த மஞ்சள் கூட உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்கும். அதற்கு தினடும் ஒரு டம்ளர் பாலில் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து பருக வேண்டும்.
மோர்: மோரில் 2.2 கிராம் கொழுப்புக்களும், 99 கலோரிகளும் தான் உள்ளது. எனவே இவற்றை அன்றாடம் பருகி வந்தால், உடலில் கொழுப்புக்கள் சேர்வது குறைவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
தேன்: தேன் உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்களுக்கு ஒரு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த ஒரு பொருள் தான் தேன். இத்தகைய தேனை சர்க்கரைக்கு பதிலாக சேர்த்து வந்தால் தொப்பை குறைவதோடு, சருமமும் பொலிவோடு இருக்கும்.
முட்டைக்கோஸ்: முட்டைக்கோஸில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இவற்றை உடல் பருமன் உள்ளவர்கள் உட்கொண்டு வந்தால், தொப்பை வளர்வது குறையும். அதுமட்டுமின்றி, அன்றாட உணவில் சேர்த்து வர தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.
கடுகு எண்ணெய்: கடுகு எண்ணெய் சமைக்கும் போது உணவில் வெஜிடேபிள் ஆயிலை சேர்ப்பதற்கு பதிலாக, கடுகு எண்ணெயை சேர்த்து வந்தால், உடலில் செரிமான மண்டலம் சுத்தமாகி கொழுப்புக்கள் வெளியேற ஆரம்பிக்கும். இதனால் உடல் எடையும் குறையும்.
பூண்டு: பூண்டில் சல்பர் அதிகம் இருப்பதால், அவை கொழுப்புக்களை உடையச் செய்து, உடலில் சேர்வதைத் தடுக்கும். அதற்கு ஒவ்வொரு முறை உணவு உட்கொண்ட பின்னரும் ஒரு பூண்டை சாப்பிட வேண்டும். இப்படி பச்சையாக சாப்பிட்டால், இதன் பலன் விரைவில் தெரியும்.
தக்காளி விலைக் குறைவில் கிடைக்கும் உணவுப் பொருட்களில் ஒன்று தான் தக்காளி: இத்தகைய தக்காளியில் கலோரிகள் குறைவாக இருப்பதுடன், இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது.
கீரைகள்: கீரைகள் கூட உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும் அற்புதமான உணவுப் பொருட்களில் ஒன்று. ஏனெனில் இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது.
கறிவேப்பிலை: அனைவரும் தூக்கி எறியும் கறிவேப்பிலையை பச்சையாக தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் மற்றும் டாக்ஸின்கள் வெளியேறிவிடும்.
ஏலக்காய்: மசாலா பொருட்களில் ஒன்றான ஏலக்காய் செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது. மேலும் ஏலக்காய் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்கும்
பீன்ஸ்: வீட்டில் அடிக்கடி செய்யும் பீன்ஸ் பொரியலை உட்கொண்டு வந்தாலே உடல் எடையைக் குறைக்கலாம் என்பது தெரியுமா? ஆம், ஏனெனில் பீன்ஸில் உடல் எடையைக் குறைக்கும் திறன் உள்ளது.
புதினா: புதினா உடலில் தங்கியுள்ள தேவையற்ற நச்சுக்களை சுத்தம் செய்ய உதவுவதோடு, உடலை அமைதிப்படுத்தும். அதுமட்டுமின்றி, புதினா வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும்.
மீன்: இறைச்சிகளை உட்கொள்வதற்கு பதிலாக, மீனை உட்கொண்டு வந்தால், உடலுக்கு வேண்டிய புரோட்டீன், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் கிடைப்பதுடன், அதில் கொழுப்புக்களும் குறைவாக உள்ளது.

சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு..! ரூ.10ல்

ரூ.10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு..! 

இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது. 

இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது. 

எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், 

ஆனால் வலியின் அளவுகூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார். 

ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார். 

மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். 

சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, 

உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும்அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார். 

சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். 

இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும், 
வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன்,
 
இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும். 

எனவே கூகுளிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார் 

அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிப்பது தான்). 

( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால்சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், 

இன்னும் அதிகமாக குடிக்கமுடிந்தால் நலம்.

நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், 

வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது. 

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், 

அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும், 

பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும், சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,

அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். 

கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்துரத்தமும் வரலாம், 

ஒரு நாளில் சரியாகிவிடும்.மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது. 

அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்... 

இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். 

தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள். 

சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான் இணைய தளத்தில் படித்ததில் சில : 

துளசி இலை(basil) : 

இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)

ஆப்பிள்(Apple) : 

அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம். திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம். 

மாதுளம் பழம்(pomegranate ): 

இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம். 

அத்திப்பழம்(Figs) : 

இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம். 

தண்ணீர்பழம்(water melon ): 

நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம். 

இளநீர் : 

இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம். 

வாழைத்தண்டு ஜூஸ் : 

வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம். 

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள். 

பின் குறிப்பு 1 : 

கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருத்துவரிடம் சென்றுவிடுவதே நல்லது. 

குறிப்பு 2 : 

இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். 

இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம். 

ஈரோடு முககநூல் நண்பர்

ரூ.10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு..!
இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.
இதனால் உண்டாகும் வலிய...ானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.

---ஈரோடு முககநூல் நண்பர்

வெள்ளி, 12 டிசம்பர், 2014

ஓட்ஸ் என்னும் அரக்கன். அதிர்சிக்குரிய தகவல்

ஓட்ஸ் என்னும் அரக்கன். அதிர்சிக்குரிய தகவல் 

இன்றைய நவீன உணவு முறையில் ஓட்ஸ் என்பது அத்தியாவசிய உணவு என ஆகிவிட்டது. அதுவும் நீரிழிவு நோயாளிகள்,உடல் எடை குறைப்பு முயற்சியில் உள்ளவர்கள் ஓட்ஸ் சாப்பிடுவதை பெருமையாக நினைக்கிறார்கள்.

10 ஆண்டுகளுக்கு முன்வரை நம்நாட்டில் ஓட்ஸ் இல்லை. ஆனால் இன்று ஆண்டுக்கு சில ஆயிரம் கோடிகளுக்கு விற்பனை ஆகிறது. இதற்கு பின்னால் பன்னாட்டு வணிக மோசடி உள்ளது.

ஓட்ஸ் ஆஸ்திரேலியாவில் பெரும்பான்மையாகவும் , ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும் விளையும் ஒரு பயிர் . அதை அப்படியே உணவாக சாப்பிட முடியாது . சில வழிமுறைகளில் தட்டையாக மாற்றப்படுகிறது . அதையும் கூட நம்ம ஊர் உணவு போல அதிக அளவில் எடுத்து கொள்ள முடியாது . சில கிராம் மட்டுமே ( ஸ்பூன் அளவு ) எடுத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிடுகிறோம் . அதிலும் சத்து எதுவும் கிடையாது . பசியை கட்டுபடுத்தும் குணம் மட்டுமே இதற்கு உண்டு .

அதிக விலை கொடுத்து வாங்கும் ஓட்ஸ் -ஐ விட நம் ஊர் ராகியில் பல மடங்கு சத்து உள்ளது . சுமார் ஒரு கிலோ ராகி சாப்பிடுவது 4 கிலோ ஓட்ஸ் சாப்பிடுவதற்கு சமம் . ஒரு கிலோ ராகி மாவு வெறும் 35 ரூபாய் தான் . 4 கிலோ ஓட்ஸ் 140*4= 560 ரூபாய் . எவ்வளவு மடங்கு விலையில் வித்தியாசம் பாருங்கள் .

எங்கோ ஆஸ்திரேலியாவில் விளையும் (அவர்கள் அதிகம் சாப்பிடுவது கிடையாது ) ஓட்ஸை நாம் சாப்பிடுவதில் MNC கொள்ளை அதிக அளவில் உள்ளது . சில ஆண்டுகளாக போலி விளம்பரங்கள் மூலமும் , மருத்துவர்கள் மூலம் கட்டாயப் படுத்தியும் நம்மை அடிமை ஆக்கி விட்டன . [குறிப்பாக பெப்சி நிறுவனத்தின் QUAKER பிராண்ட் . குளிர்பான தொழிலில் இந்திய நிறுவனங்களை ஒழித்தது போல உணவில் இந்திய பாரம்பரிய உணவுகளை ஒழிக்கப் பார்க்கிறது]. www.puradsifm.com 

அந்தந்த நாடுகளிருந்து இங்கு நம் இந்தியாவுக்கு வர ஆகும் எரிபொருள் செலவு , MNC நிறுவனங்களின் கொள்ளை லாபம் எல்லாம் சேர்த்து பயனற்ற பொருளை அநியாய விலைக்கு நம் தலையில் கட்டுகின்றன.

அதைவிட ராகி , கம்பு , சோளம் , திணை , வரகு , சாமை போன்ற நம் நாட்டு தானியங்கள் எல்லாம் பலமடங்கு சத்துள்ளவை . விலையும் குறைவு !!!

சத்துநிறைந்த நம் பாரம்பரிய உணவு இருக்க சக்கையை உண்டு நம் பணத்திற்கும் உடல்நலத்திற்கும் வேட்டு வைக்கலாமா !!! ?

இதை என்றென்றும் சிந்தையில் இருத்துங்கள் !!!
அந்நிய பொருட்களை அநியாய விலைக்கு வாங்குவதை அறவே நிறுத்துங்கள் !!!
--------------------------------------------------------------------------------------
தமிழ் வானொலிகளுள், ஓர் வித்தியாசமான இசைத் தொழில்நுட்பத்தில், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் Tune in இல் புரட்சி எப்.எம் ஐக் கேட்டு மகிழ இங்கே கிளிக் செய்யுங்கள்
http://tunein.com/radio/Puradsi-Fm-s172414/

www.facebook.com/puradsifm 
.......................................................
www.puradsifm.com
www.isaiyaruvi.com
www.puradsifm.com/news
ஓட்ஸ் என்னும் அரக்கன். அதிர்சிக்குரிய தகவல்
இன்றைய நவீன உணவு முறையில் ஓட்ஸ் என்பது அத்தியாவசிய உணவு என ஆகிவிட்டது. அதுவும் நீரிழிவு நோயாளிகள்,உடல் எடை குறைப்பு... முயற்சியில் உள்ளவர்கள் ஓட்ஸ் சாப்பிடுவதை பெருமையாக நினைக்கிறார்கள்.
10 ஆண்டுகளுக்கு முன்வரை நம்நாட்டில் ஓட்ஸ் இல்லை. ஆனால் இன்று ஆண்டுக்கு சில ஆயிரம் கோடிகளுக்கு விற்பனை ஆகிறது. இதற்கு பின்னால் பன்னாட்டு வணிக மோசடி உள்ளது.
ஓட்ஸ் ஆஸ்திரேலியாவில் பெரும்பான்மையாகவும் , ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும் விளையும் ஒரு பயிர் . அதை அப்படியே உணவாக சாப்பிட முடியாது . சில வழிமுறைகளில் தட்டையாக மாற்றப்படுகிறது . அதையும் கூட நம்ம ஊர் உணவு போல அதிக அளவில் எடுத்து கொள்ள முடியாது . சில கிராம் மட்டுமே ( ஸ்பூன் அளவு ) எடுத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிடுகிறோம் . அதிலும் சத்து எதுவும் கிடையாது . பசியை கட்டுபடுத்தும் குணம் மட்டுமே இதற்கு உண்டு .
அதிக விலை கொடுத்து வாங்கும் ஓட்ஸ் -ஐ விட நம் ஊர் ராகியில் பல மடங்கு சத்து உள்ளது . சுமார் ஒரு கிலோ ராகி சாப்பிடுவது 4 கிலோ ஓட்ஸ் சாப்பிடுவதற்கு சமம் . ஒரு கிலோ ராகி மாவு வெறும் 35 ரூபாய் தான் . 4 கிலோ ஓட்ஸ் 140*4= 560 ரூபாய் . எவ்வளவு மடங்கு விலையில் வித்தியாசம் பாருங்கள் .
எங்கோ ஆஸ்திரேலியாவில் விளையும் (அவர்கள் அதிகம் சாப்பிடுவது கிடையாது ) ஓட்ஸை நாம் சாப்பிடுவதில் MNC கொள்ளை அதிக அளவில் உள்ளது . சில ஆண்டுகளாக போலி விளம்பரங்கள் மூலமும் , மருத்துவர்கள் மூலம் கட்டாயப் படுத்தியும் நம்மை அடிமை ஆக்கி விட்டன . [குறிப்பாக பெப்சி நிறுவனத்தின் QUAKER பிராண்ட் . குளிர்பான தொழிலில் இந்திய நிறுவனங்களை ஒழித்தது போல உணவில் இந்திய பாரம்பரிய உணவுகளை ஒழிக்கப் பார்க்கிறது.
அந்தந்த நாடுகளிருந்து இங்கு நம் இந்தியாவுக்கு வர ஆகும் எரிபொருள் செலவு , MNC நிறுவனங்களின் கொள்ளை லாபம் எல்லாம் சேர்த்து பயனற்ற பொருளை அநியாய விலைக்கு நம் தலையில் கட்டுகின்றன.
அதைவிட ராகி , கம்பு , சோளம் , திணை , வரகு , சாமை போன்ற நம் நாட்டு தானியங்கள் எல்லாம் பலமடங்கு சத்துள்ளவை . விலையும் குறைவு !!!
சத்துநிறைந்த நம் பாரம்பரிய உணவு இருக்க சக்கையை உண்டு நம் பணத்திற்கும் உடல்நலத்திற்கும் வேட்டு வைக்கலாமா !!! ?
இதை என்றென்றும் சிந்தையில் இருத்துங்கள் !!!
அந்நிய பொருட்களை அநியாய விலைக்கு வாங்குவதை அறவே நிறுத்துங்கள் !!!
--------------------------------------------------------------------------------------

வியாழன், 11 டிசம்பர், 2014

மண்பானை மிக சிறந்த நீர் வடிகட்டி

மண்பானை மிக சிறந்த நீர் வடிகட்டி

• நீங்கள் மினரல் வாட்டர் மட்டும் குடிப்பவரா...?
• தண்ணீரை காய்ச்சி குடிப்பவரா..?
• ஒரு நாளைக்கு இத்தனை லிட்டர் என்ற அடிப்படையில் குடிப்பவரா...?
...
கண்டிப்பாக உங்கள் சிறு நீரகம் செயல் இழக்க வாய்ப்பு அதிகம்.
ஒரு நாளைக்கு இத்தனை லிட்டர் என்று எந்த அடிப்படையில் சொல்கிறார்கள்..?
வெயில் பிரதேசத்தில் வாழ்பவருக்கும் குளிர் பிரதேசத்தில் வாழ்ப்வருக்கும் உடலின் நீர் தேவை வேறுவேறு அல்லவா..?
எப்படி பொதுவாக வறையறை செய்ய முடியும்..?
நீரில் கெட்ட கிரிமிகளும் உண்டு.(இதை படிக்கும் உங்களுக்கு தடுப்பூசி போட்டிருந்தால் கண்டிப்பாக உங்கள் உடம்பில் அந்த கிருமி உண்டு) சாதரண தண்ணீரில் இருக்கும் தாது சத்துக்கள்... மினரல் வாட்டரில் கிடையாது. மினரல்/வெந்நீரில் இவையனைத்தும் இறந்துபோகின்றன். நீரில் இருக்கும் சில தாதுக்களை நம்பி நம் உடல் உறுப்புகள் உள்ளன். அந்த தாதுக்கள் கிடைக்காவில்லை என்றால் அவற்றின் செயல் திறன் பாதிக்கபடும். நீங்கள் சதுரகிரி/அல்லது வேறு ஏதாவது மலைப்பகுதி சென்ரு அங்கிருக்கும் நீரை பருகி பாருங்கள் எதுவும் செய்யாது. ஒரு வேளை சாதரண நீரை அருந்தி தொண்டை கட்டினாலோ அல்லது சளிபிடித்தாலோ நல்லது தான். அந்த நீர் உங்கள் உடம்பில் இருக்கும் கிருமிகளை வெளியேற்றுகிறது. பின்னர் பழகிவிடும்.
மினரல் வாட்டரில் கிரிமியும் இல்லை. தாதுவும் இல்லை. சிறு நீரகம் என்ன வேலை செய்யும். சிறுநீரகத்தின் வேலையே நாம் குடிக்கும் தண்ணீரை சுத்தபடுத்தி தேவையான் தாதுக்களை எடுத்துகொண்டு மற்றவற்றை வெளியேற்றுவதுதான். நீங்கள் அந்த வேலையை நிறுத்திவிட்டீர்கள். அது என்ன செய்யும்....?
போதக்குறைக்கு உடல் நீரை கேட்கிறதோ இல்லையோ இத்தனை லிட்டர் என்று நீங்கள் உள்ளே அனுப்பிகொண்டே இருந்தால் சிறுநீரகம் என்ன வேலை செய்யும்...?
இவ்வளவுதான் என கணக்கு இல்லை. உங்கள் உடம்பு எப்போது நீர் கேட்கிறதோ எவ்வளவு கேட்கிறாதோ கொடுங்கள். எப்போது சிறுநீர் கழிக்கிறீர்களோ அப்போது கொஞ்சம் நீர் அருந்துங்கள். (இது கட்டாயமில்லை ஆனால் நல்லது).
நீரை அண்ணாந்து குடிக்காதீர்கள். அது காற்றையும் சேர்த்து உள்ளே அனுப்பும். வாய்வைத்து குடியுங்கள். நீரை மெதுவாக, வாயில் கொஞ்சம் வைத்திருந்து குடியுங்கள். உங்க உமிழ்சேர்ந்தால் இன்னும் நல்லது. இடது கையால் குடியுங்கள். கொஞ்சம் கொஞ்மாக நீரை உள்ளே அனுப்புங்கள். நீரை எப்படி வடிகட்டுவது?. மண்பானை வாங்குங்கள். முதல் நாள் இரவு அதில் தண்னீரை உற்றுங்கள். மறுநாள் அதை சாதரண பானைக்கு மாற்றிவிடுங்கள்.(குளிர் வேண்டுமென்றால் அப்படியே குடிக்கலாம்) 6 மணி நேரத்திற்கு மேல் மண்பானையில் இருக்கும் நீரில் கிரிமிகள் வெளியேற்றபடும். ஆனால் தாதுக்கள் வெளியேறாது..
.
முடிந்தால் அனைத்திற்கும் மண் பானையை பயன்படுத்துங்கள்.
குறிப்பு :-
மண் பானை அனைத்து வடிவத்திலும் கிடைக்கிறது

நோய் நொடியின்றி வாழ ஊட்டச்சத்துக்கள் 10!

உடல் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் ஊட்டச்சத்து மிகமிக அவசியம். குறிப்பாகப் பெண்கள் மாதவிடாய் காலங்களிலும், கருவுற்ற நேரத்திலும ஊட்டச்சத்துக்களின் தேவை மிகவும் அதிகமாகவே இருக்கும். நோய் நொடியின்றி நலமாக வாழ்வதற்குத் தேவையான பத்து ஊட்டச்சத்துக்களின் பட்டியல் இங்கே..

1. ஃபோலிக் ஆசிட்

கஷ்டமில்லா சுகப் பிரசவத்துக்கு இந்த வைட்டமின் தேவைப்படுகிறது. இந்த வைட்டமின் சத்து குறைந்தால், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னை ஏற்படுவது மட்டுமின்றி, மூளையின் செயல்பாடும் பாதிக்கப்படும். பெண் குழந்தைகளுக்கு மிகவும் அவசியமான சத்து இது.

பச்சைக்காய்கறிகள் மற்றும் அவகேடோ பழத்தில் இந்த வைட்டமின் அதிகம் இருக்கிறது.

2. இரும்புச்சத்து

ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு உதவும் பெரும் பங்கு இரும்புச்சத்துக்கு அதிகம். இந்த வைட்டமின் குறைபாடு உள்ளவர்கள் எப்போதும் களைப்பாகவும், சோர்வாகவும் இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்திலும் கவனக்குறைவு ஏற்படும்.

மாமிசம், ப்ராக்கோலி மற்றும் பீன்ஸில் இரும்புச்சத்தை அதிகம் பெறலாம்.

3. கால்சியம்

உறுதியான பல்லுக்கும், எலும்புக்கும் கால்சியம் அவசியம். 35 வயதில் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டால் எலும்பு தொடர்பான நோய்கள் வரும். இளம் வயதிலேயே இந்தச் சத்தை எடுத்துக் கொண்டால் எலும்புத் தேய்மானம் பிரச்னை மற்றும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

பால், சீஸ், பசலைக்கீரை மற்றும் பாதாம் போன்றவற்றில் இந்த ஊட்டச்சத்து கிடைக்கும்.

4. வைட்டமின் D

மனித உடலில் போதுமான அளவுக்குக் கிடைக்காத ஒரு முக்கியமான வைட்டமின் இது. சூரிய ஒளியிலிருந்து மட்டுமே இந்தச் சத்தைப் பெறமுடியும். இதன் மூலம், மனஅழுத்தம், நெஞ்சு வலி போன்ற பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம். பல்லுக்கும் எலும்புக்கும் தேவையான கால்சியம் சத்தும் இந்த வைட்டமினிலிருந்து அதிகம் கிடைக்கிறது.

5. மக்னீசியம்

உடலின் பல்வேறு வேதியியல் மாற்றங்களுக்குக் காரணமாக இருக்கிறது இந்தச் சத்து. நரம்பு, தசை, தோல் மற்றும் எலும்பு வலுவாக வைத்திருப்பதோடு மட்டுமில்லாமல் உயர் ரத்த அழுத்தத்தைச் சமநிலையில் இருக்க உதவுகிறது.
பூசணி விதை, பசலைக்கீரை, பாதாமில் இருந்து இந்தச் சத்தைப் பெறலாம்.

6. வைட்டமின் E

கொழுப்புப் பொருட்களில் அதிகமாகக் காணப்படும் இது ஒரு சிறந்த ஆன்டிஆக்சிடன்ட், நோய் எதிர்ப்புச்சக்திக்கு உறுதுணையாக அமைகிறது,

கொய்யா, நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிசை மற்றும் முருங்கை, காலிபிளவர், கீரை வகைகள், முளை தானியங்களின் மூலம் பெறலாம்.
7. ஒமெகா-3

பெண்களுக்கு மிகவும் தேவைப்படும் ஒரு சிறந்த கொழுப்பு அமிலம் இது. உயர் ரத்த அழுத்தம், வீக்கம் மற்றும் நாள்பட்ட நோய்களைச் சரி செய்வதுடன் இதயப் பாதிப்பிலிருந்தும் காக்கிறது. நாள் ஒன்றுக்கு 1.1 கிராம் அளவுக்குப் பெண்களுக்குத் தேவைப்படும்

கடல் மீன்களிலிருந்து இதை பெறலாம்.

8. பொட்டாசியம்

பொட்டாசியத்தின் குறிப்பிடத்தக்க வேலை நரம்புகளில் ரத்தத்தைப் பிரச்னைகள் இல்லாமல் எடுத்துச் செல்ல உதவுவதுதான். மேலும், உறுதியான எலும்புக்கும், புத்துணர்ச்சிக்கும் சக்தியாக அமையும் இந்தச் சத்தை தயிர், உருளைகிழங்கு மீன் மற்றும் மாமிசத்தில் இருந்து அதிகம் பெறலாம். 19 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு, நாள் ஒன்றுக்கு 4700 மி.கி அளவு இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

9. வைட்டமின் C

நோய் எதிர்ப்புச்சக்திக்கு அதிகம் தேவைப்படும் இந்த வைட்டமின் ஒரு சிறந்த ஆன்டிஆக்சிடன்ட். தோல் சம்பந்தப்பட்ட பிரச்னை வராமல் தடுக்கும் இந்த வைட்டமினை 19 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 75 மி.கி அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆரஞ்சு. கிவி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களியிருந்து இந்த வைட்டமினை பெறலாம்.

10. நார்ச்சத்து

குடல் செரிமானத்துக்குப் பெரிதும் உதவுவது நார்ச்சத்து. 19-50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஒரு நாளைக்கு 25 கிராம் அளவுக்கு மட்டுமே இதை எடுத்துக் கொள்ளவேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு இது அவசியம் தேவைப்படுகிறது. இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது.

கோதுமை, காய்கறி, கீரை மற்றும் பழங்கள் மற்றும் தானியங்கள் நார்ச்சத்து நிறைந்தவை.